மயிலாப்பூர் மருத்துவர் சிவகுருநாதன் கைது : 100க்கும் மேற்பட்ட பெண் நோயாளிகளை படம் பிடித்து சீரழித்தது அம்பலம்

- in டாப் நியூஸ்
37
Comments Off on மயிலாப்பூர் மருத்துவர் சிவகுருநாதன் கைது : 100க்கும் மேற்பட்ட பெண் நோயாளிகளை படம் பிடித்து சீரழித்தது அம்பலம்

சென்னை: சென்னையில் பெண் நோயாளிகளை படம் பிடித்த தனியார் மருத்துவமனையின் மருத்துவர் சிவகுருநாதன் மீது மேலும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளனர். சென்னை மயிலாப்பூர் லோகநாதன் தெருவை சேர்ந்தவர் சிவகுருநாதன் (64). டாக்டரான இவர், மயிலாப்பூர் நாட்டுசுப்பராயன் தெருவில் ஆர்.எம்.கிளினிக் என்ற ெபயரில் மருத்துவமனை நடத்தி வருகிறார். பெண்களுக்கான சிறப்பு டாக்டர் என்பதால் அப்பகுதியில் கைராசி டாக்டர் என்று பெயர் பெற்றவர்.இந்நிலையில் இந்த மருத்துவர் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்கள்
வந்த வண்ணம் உள்ளனர்.

குறிப்பாக நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு திருவள்ளூரைச் சேர்ந்த 29 வயது பெண்மணி ஒருவர்
தனது இரண்டு குழந்தைகளுடன் நெஞ்சுவலி காரணமாக டாக்டர் சிவகுருநாதனிடம் சிகிச்சைக்கு சென்றுள்ளார். அப்போது டாக்டர் சிவகுருநாதன், இரண்டு குழந்தைகளையும் வெளியே அனுப்பிவிட்டு, பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறி, அந்த பெண்ணை மட்டும் தனி அறைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர், சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு தெரியாமல் அறையில் தனது செல்போனை ஆன் செய்து வீடியோ எடுத்துள்ளார்.

அப்போது, அந்த பெண்ணின் மேல் ஆடைகளை கழற்றி ஸ்டெதஸ்கோப் உதவியுடன் பரிசோதனை செய்வது போல் நடித்துள்ளார். அந்த நேரத்தில், எதிர்பாராத விதமாக சிகிச்சைக்கு வந்த நபர் ஒருவர் திடீரென டாக்டரை தேடி அறைக்குள் நுழைந்துள்ளார். அப்போது, மருத்துவர் சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் தவறாக நடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து வெளியே ஓடி வந்துவிட்டார். பின்னர், சிறிது நேரம் கழித்து மருத்துவர் மற்றும் சிகிச்சைக்கு வந்த பெண் வெளியே வந்தனர். அப்போது அந்த பெண்ணிடம், ‘‘உள்ளே என்ன நடந்தது’’ என்று வெளியில் காத்திருந்த நபர் கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண், ‘‘அவர் மருத்துவர் போல் என்னிடம் நடந்து கொள்ளவில்லை’’ என்று கூறி கதறி அழுதுள்ளார். உடனே அந்த நபர் மருத்துவரிடம் சென்று சம்பவம் குறித்து கேட்டுள்ளார்.

அதற்கு டாக்டர், ‘‘இது வெறும் சிகிச்சைதான். இதை நீங்கள் தப்பா எடுத்துக்க கூடாது’’ என்று கிண்டலாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், டாக்டரின் செல்போனை பறித்து பார்த்த போது சிகிச்சைக்கு வந்த பல பெண்களிடம் இதுபோல தவறாக நடந்தது அம்பலத்திற்கு வந்தது. உடனே டாக்டர் அந்த செல்போனை பிடுங்கி அதில் இருந்த மெமரி கார்டை எடுத்து உடைத்து வெளியே வீசிவிட்டார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் மற்றும் நேரில் பார்த்த நபர் இருவரும் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி, இன்ஸ்பெக்டர் கண்ணன் டாக்டர் சிவகுருநாதனை பிடித்து அவரின் இரண்டு செல்போன்களையும் பறிமுதல் செய்து ஆய்வு செய்தார். அப்போது, மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த சுமார் 60 பெண்களை சிகிச்சை என்ற பெயரில் ஆடைகளை கழற்ற சொல்லி அவர்களிடம் தவறாக நடக்கும் காட்சி பாதிவாகி இருந்தது.

பின்னர் அவரிடம் போலீசாரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, “டாக்டர் சிவகுருநாதன் சிகிச்சைக்கு வரும் பெண்களில் அழகான பெண்களின் மன நிலைப்படி அவர்களுக்கு தெரியாமல் தனது செல்போனை சிகிச்சை அறையில் ஆன் செய்து வைத்து விடுவார். அவர்களிடம் சிகிச்சை என்ற பெயரில் தகாத முறையில் நடந்து கொள்வார்.பிறகு மீண்டும் அந்த பெண்ணை சிகிச்சைக்கு வர வேண்டும் என்று கூறி அனுப்பி விடுவார். அதன்படி பெண்கள் மீண்டும் சிகிச்சைக்கு வரும் போது, முதல் நாள் எடுத்த வீடியோவை அந்த பெண்களிடம் காட்டி மருத்துவமனையில் உள்ள அறையிலேயே உல்லாசமாக இருந்துள்ளார்.

பல பெண்கள் இந்த சம்பவம் வெளியில் தெரிந்தால் நமக்குதான் பிரச்னை என்று மூடி மறைத்துள்ளனர்.இதை டாக்டர் சிவகுருநாதன் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் ெகாண்டு பல ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை படம் பிடித்து மிரட்டி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். பெண்களை ஆபாசமாக எடுத்த வீடியோவை தனிமையில் இருக்கும் போது பார்த்து ரசிக்கும் பழக்கம் உடையவர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து டாக்டர் சிவகுருநாதன் மீது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்டம், அடுத்தவரின் அனுமதியன்றி படம் எடுத்தல், மறைந்து ஆபாசமாக படம் எடுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் டாக்டரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் பெண்களை சீரழித்ததாக சுமார் 15திற்கும் மேற்பட்டோர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் சிவகுருநாதன் மீது புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தற்போது சிறையில் இருக்கும் சிவகுருநாதனிடம் அடுத்தகட்ட விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். எனவே இன்னும் பல்வேறு தகவல்கள் வெளியே வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. இதனிடையே செல்போன் மட்டுமல்லாது லேப்டாப், கணினி ஆகியவற்றிலும் நோயாளிகளின் வீடியோக்கள் பதிவிடப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்க உள்ளனர். மேலும் சிவகுருநாதன் மட்டும் தான் இந்த செயலில் ஈடுப்பட்டுள்ளாரா அல்லது இவரோடு சேர்ந்து வேறு யாரேனும் இருக்கிறார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்