மன்சூர் அலிகானின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம் !

- in டாப் நியூஸ்
65
Comments Off on மன்சூர் அலிகானின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம் !
சேலம் எட்டுவழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறையில் இருக்கும் மன்சூர் அலிகானின் ஜாமின் மனுவை அத்தூர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
சேலம் எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை சற்றும் பொருட்படுத்தாத மாநில அரசு நிலத்தை கையக்கபடுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் பேசிய மன்சூர் அலிகான், இத்திட்டத்தால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை, அரசியல்வாதிகள் மட்டுமே கல்லா கட்டுவார்கள் எனவும் எதிர்ப்பை மீறி எட்டு வழிச்சாலை அமைத்தால் எட்டு பேரை கொன்றுவிட்டு சிறைக்கு செல்வேன் என ஆவேசமாக பேசினார்.
இதனால் சேலம் போலீஸார், மன்சூர் அலிகானை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.  ஜாமின் கோரி மன்சூர் அலிகான் மனு அளித்திருந்தார். இதனை விசாரித்த ஆத்தூர் நீதிமன்றம் மன்சூர் அலிகானின்  ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்