மக்களே நமது எஜமானர்கள்: ராகுல் பேச்சு

- in டாப் நியூஸ்
137
Comments Off on மக்களே நமது எஜமானர்கள்: ராகுல் பேச்சு

சிம்லா: மக்களே நமது எஜமானார்கள் என நாம் அனைவரும் கருத வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் பேசினார்.

சிறந்த அரசியல்வாதி

 

சிம்லாவில் கட்சி தொண்டர்கள் மத்தியில் ராகுல் பேசியதாவது: மக்கள் தான் நமது எஜமானார்கள் என நாம் அனைவரும் கருத வேண்டும். இதன் அடிப்படையில் அனைவரும் இணைந்து செயல்பட்டு, காங்கிரஸ் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். நான் அனைவரும் இணைந்து செயல்பட முடியும் என்பதை குஜராத் தேர்தலில் கற்று கொண்டேன். அங்கு கட்சி ஒற்றுமையாக செயல்பட்டு தேர்தலில் போட்டியிட்டது. ஆனால், இமாச்சல பிரதேசத்தில் அவ்வாறு செயல்படவில்லை. மக்களுடன் இணைந்து செயல்படுபவரே சிறந்த அரசியல்வாதி என்பதை நாம் நினைவு கூர்வோம்.

அங்கீகாரம்

 

அன்பு மற்றும் மரியாதையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இதுவே காங்கிரசின் கொள்கை. நாட்டின் பெரிய பிரச்னையாக வேலைவாய்ப்பின்மை உள்ளது. வேலைகளை உருவாக்குவதில் நாம் சீனாவுடன் கடும் போட்டி போட வேண்டும். பா.ஜ., கொள்கைக்கு எதிராகவும், கட்சிக்காக கடுமையாக உழைப்பவர்களுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்படும். கட்சியில் மக்களுக்காக உழைப்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களை போன்றவர்கள் உயர்த்த வேண்டும். நாம் எதிர்க்கட்சியாக இருப்பதால், மக்களின் உரிமைகளுக்காக போராட இளைஞர்களுக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்