போன உயிரை சிங்கப்பூரில் இருந்து கொண்டு வந்தது ரசிகர்களின் அன்பு… கண்கலங்கிய ரஜினி!

- in டாப் நியூஸ்
136
Comments Off on போன உயிரை சிங்கப்பூரில் இருந்து கொண்டு வந்தது ரசிகர்களின் அன்பு… கண்கலங்கிய ரஜினி!

சென்னை : உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது எனக்காக பலர் மண்சோறு சாப்பிட்டு, கடவுளிடம் வேண்டி சிங்கப்பூரில் இருந்து என்னுடைய உயிரை மீட்டு வந்தது ரசிகர்களின் அன்பு தான். இன்று ரசிகர் ஒருவர் எழுதிய கடிதத்தை நினைக்கும் போது எனக்கு கண்கலங்குகிறது என்று ரஜினி ரசிகர்கள் மத்தியில் உருக்கமாக பேசினார்.

 ரசிகர்கள் மத்தியில் 5வது நாளாக பேசிய நடிகர் ரஜினிகாந்த், ரசிகர்களின் அன்பு பற்றி மிகவும் உருக்கமாக பேசினார். அவர் கூறியதாவது, நான் உடல்நிலை சரியில்லாத போது போன உயிரை சிங்கப்பூரில் இருந்து கொண்டு வந்தேன். நான் கொண்டு வந்தேன் என்று சொல்வதை விட ரசிகர்கள் கொண்டு வந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

எனக்கு உடல்நிலை சரியில்லாத போது ரசிகர்கள் விதவிதமான பிரார்த்தனைகளை செய்தனர். எனக்காக மண்சோறு சாப்பிட்டு, வேண்டுதல் நிறைவேற்றினர். இதையெல்லாம் பார்த்த போது நான் என்ன செய்தேன், என்று மிகவும் பிரமிப்பாக இருந்தது.

 • ரசிகர்களின் அன்பு

  ரசிகர்களின் ஈடில்லாத அன்பு

  ரசிகர்கள் என் மீது அவ்வளவு அன்பை ஏன் பொழிகிறார்கள் என்றும் எனக்கு புரியவில்லை. எனக்கு அந்த சமயத்தில் ரசிகர் ஒருவர் ஒரு கடிதம் எழுதி இருந்தார், அதை இப்போது நினைத்தால் கூட எனக்கு கண்களில் தண்ணீர் வருகிறது.

 • கண்கலங்க வைத்த ரசிகர் கடிதம்

  கடிதத்தை நினைவுபடுத்தி கண்கலங்கிய ரஜினி

  தலைவா, நீ உயிருடன் வந்து நடித்து என்னை மகிழ்விக்கவும் வேண்டாம், அரசியலுக்கு வந்து என்னை காப்பாற்றவும் வேண்டாம். நீ உயிருடன் வந்தாலே போதும் என்று அந்த ரசிகர் எழுதி இருந்தார்.

 • அனைத்தையும் பார்த்துவிட்டேன்

  ஆண்டவன் அனைத்தையும் காட்டிவிட்டான்

  இதெல்லாம் நீங்கள் கொடுத்த அன்பு, ஆசிர்வாதம் என்று தான் பார்க்கிறேன். ஆண்டவன் உங்களுக்குள் தான் இருக்கிறான், இந்தப் பயணத்தில் நான் தெரிந்து கொண்டது என்னவென்றால். கீழ் இருந்து மேல் வரை அனைத்தையும் ஆண்டவன் காட்டிவிட்டான்.

 • கனவில் இருக்கும் சந்தோஷம்

  நிஜத்தில் கிடைக்காது கனவின் சந்தோஷம்

  பணம், பெயர், புகழ் என அனைத்தையும் ஆண்டவன் எனக்கு காட்டிவிட்டான். என்னுடைய அனுபவம் என்னவென்றால் கனவில் இருக்கும் சந்தோஷம் நினைவில் இருக்காது. பணம், பெயர், புகழ் காதலும் கூட நினைவாகும் போது சந்தோஷம் இருக்காது.

 • கனவு காணுங்கள்

  நியாயமான வழியில் அடையுங்கள்

  அதற்காக கனவு காணக் கூடாது என்று சொல்லவில்லை, கனவு காண வேண்டும், அந்த கனவை நியாயமான, தர்மமான முறையில் அடைய நினைக்க வேண்டும். அநியாயமான வழியில் கனவை அடைய நினைத்தால் நிம்மதியும் இருக்காது, கொஞ்ச நாளில் அது மக்களுக்கு தெரிந்து விடும். மதிப்பு, மரியாதை என அனைத்தும் போய்விடும் என்றும் ரஜினி தெரிவித்துள்ளார்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்