பொறியியல் படிப்புகளுக்கு மே 3 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தகவல்

- in டாப் நியூஸ்
82
Comments Off on பொறியியல் படிப்புகளுக்கு மே 3 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தகவல்

சென்னை: பொறியியல் படிப்பு சேர்க்கைக்கு மே 3ம் தேதி முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தகவல் தெரிவித்துள்ளார். பி.இ., பி.டெக் ஆகிய பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இந்த ஆண்டு முதல் இணையத்தின் மூலம் ஆன்லைனில் நடைபெற உள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மே 3ம் தேதி முதல் https://tnea.ac.in மற்றும் https://www.annauniv.edu ஆகிய இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 30 எனவும் அவர் கூறினார்.

விண்ணப்பித்தவர்களின் அசல் சான்றிதல் ஜூன் முதல் வாரத்தில் இருந்து சரிபார்க்கப்படும் என்றும், ஆன்லைன் மூலம் கவுன்சிலிங்கும் ஜூன் முதல் வாரத்திலேயே தொடங்கும் எனவும் அன்பழகன் குறிப்பிட்டார். மாணவர்களுக்கு கலந்தாய்வு குறித்து சந்தேகங்களை 044-22359901, 044-22359920 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு கேட்கலாம் என அவர் கூறினார். 42 மையங்கள் எங்கெங்கு அமைக்கப்பட்டுள்ளன என்ற விவரத்தை https://tnea.ac.in மூலம் தெரிந்துகொள்ளலாம். இந்த மையங்கள் மாவட்டத் தலைநகரங்களில் அமைக்கப்பட்டுள்ளன என்றும், தேவை அதிகமுள்ள மாவட்டங்களில் 2 அல்லது 3 மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துளளார்.

மேலும், இந்த ஆலோசனை மையங்கள் மூலம் மாணவ-மாணவிகள் தேவையான அனைத்து ஆலோசனைகளையும் இலவசமாக பெறலாம் என்றும், இந்த ஆண்டு கலந்தாய்வில் பங்கேற்கும் 567 கல்லூரிகளின் பட்டியல் அடங்கிய கையேடு அங்கு இலவசமாகவே வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த கையேட்டை இணையத்தின் மூலமும் பதிவிறக்கிக் கொள்ளலாம் எனவும், எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட கவுன்சிலிங் நடைமுறைகள் குறித்த குறும்படம் அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் பதிவேற்றப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். கட்டணத்தைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு பின்பற்றப்பட்ட அதே நடைமுறைதான் என்றும் அதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும் எனவும் அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்