பைரவா டீசர் விமர்சனம்

- in Featured, சினிமா
349
Comments Off on பைரவா டீசர் விமர்சனம்

விஜய் நடிப்பில் பரதன் இயக்கத்தில் உருவாகியுள்ள பைரவா. சற்று முன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. இன்று இரவு 12:01 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கபட்ட நிலையில் இரண்டு மணிநேரம் முன்கூட்டியே வெளியாகியிருக்கிறது.

 

சமீப காலமாக துப்பாக்கி, கத்தி, தெறி என தனது பாணியில் இருந்து விலகி நடித்து வந்தார் விஜய். அந்த அப்படங்களும் நல்ல வரவேற்ப்பையும் வசூலையும் பெற்று தந்தன.

ஆனால், பைரவா படத்தின் மூலம் நடிகர் விஜய், தனக்கே உறிய பாணிக்கு திரும்பி இருக்கிறார் என்பது பைரவா விஜய்-ன் வசன உச்சரிப்புகளை வைத்து கணித்துவிடலாம். சிவகாசி, குருவி, சுறா படங்களில் நடித்த விஜய்-யை பார்க்க முடிகிறது. ஆக்ஷன், ரொமான்ஸ், காமெடி என மீண்டும் தன்னை கிங் ஆஃப் கமர்ஷியல் என்று நிருபிப்பார் விஜய் என எதிர்பார்கலாம்.

யார்ரா.. யார்ரா.. இவன்.. அனல் பறக்கும் பாடல் வரிகள் விஜய் ரசிகர்களின் நரம்பை சிலிர்க்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

படத்தின் டீசரை அவசர கதியில் தயாரித்துள்ளார்கள் என்பது டீசரை முதல் முறை பார்க்கும் போதே கண்டுபிடிக்க முடிகிறது. கடைசி நேரத்தில் தீபாவளிக்கு டீசரை வெளியிட முடிவு செய்ததால் இந்த நிலை என கருத்தில் கொண்டாலும், துப்பாக்கி, கத்தி, தெறி படங்களில் டீசர்களுடன் பைரவா டீசறை ஒப்பிடுகையில் பக்கத்தில் கூட நிற்கமுடியாமல் படுக்கிறது பைரவா டீசர்.

படம் ஆரம்பத்திலிருந்தே விஜய் விக் குறித்து பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், விஜய்-ன் சிகை அலங்காரம் மிகவும் செயற்கையாக இருக்கிறது என்று ரசிகர்கள் வளைத்தளங்களில் தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.

பல சிறந்த படங்களை டீசர், ட்ரெய்லர் மூலம் எதிர்பார்ப்பை எகிற வைத்து முழு படத்தை பார்க்கும் டீசருக்கும் படத்திற்கும் சம்பந்தம் இல்லதது போல தோன்றி பல படங்கள் படுத்திருகின்றன. அந்த வகையில், படத்தின் டீசர் மூலம் படத்தின் மீது எதிர்பார்ப்பு எனும் சுமையிலிருந்து பைரவா தப்பிவிட்டது என்றே கூற வேண்டும்.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி