பேராசிரியை நிர்மலாதேவியை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வாய்ப்பு இல்லை : சிபிசிஐடி தகவல்

- in டாப் நியூஸ்
42
Comments Off on பேராசிரியை நிர்மலாதேவியை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வாய்ப்பு இல்லை : சிபிசிஐடி தகவல்

விருதுநகர் : பேராசிரியை நிர்மலாதேவி  வழக்கில் ஆராய்ச்சி மாணவர் கருப்புசாமி பிடிபட்டால் பல உண்மைகள் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக  கைதானார். இவரை சிபிசிஐடி போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் முக்கிய விஐபிக்கள், மதுரை  காமராஜர் பல்கலைக்கழக உயரதிகாரிகள், பேராசிரியர்கள் சிலருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இவ்வழக்கில் மதுரை காமராஜர்  பல்கலை. உதவி பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமியை சிபிசிஐடி போலீசார் தேடி வந்தனர்.

மதுரை ஒத்தக்கடையில் வசிக்கும் முருகன், விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே நாடாகுளம் கிராமத்தில் வசிக்கும் கருப்பசாமி வீடுகளிலும்  சிபிசிஐடி போலீசார் தேடி வந்தனர். நாடாகுளம் கிராமத்தில் 2 நாட்களுக்கும் மேலாக சிபிசிஐடி போலீசார் முகாமிட்டு அவரை தேடி வருகின்றனர். தேடுதல் வேட்டை தொடர்ந்த நிலையில், வருகை பதிவேட்டில் கையெழுத்திட உதவி பேராசிரியர் முருகன் மதுரை  காமராஜர் பல்கலைக்கழகம் வந்தார். அங்கு காத்திருந்த சிபிசிஐடி போலீசார், அவரை சுற்றிவளைத்தனர்.

சிபிசிஐடி விசாரணைக்கு நிர்மலாதேவி ஒத்துழைக்க மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான கேள்விகளுக்கு  ‘ஆம்’, ‘இல்லை’ என  ஒற்றை வார்த்தையில் பதில் தருவதாக கூறுகின்றனர். விளக்கமான பதில்களை தருவதில்லை. இதனால், விசாரணையில் சிக்கல் ஏற்படுவதாக  சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். இருந்தபோதும் அவரது வீட்டில் எடுக்கப்பட்ட ஆவணங்கள், செல்போன் உரையாடல் மூலம் பெரும்பகுதி விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இன்றுடன் 5 நாள்  விசாரணை நிறைவடைய உள்ளதால், மாலை நிர்மலாதேவி சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால்  நிர்மலாதேவியின் காவல்  நாளை பிற்பகல் 2 மணி வரை உள்ளதால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வாய்ப்பு இல்லை எனவும் கூறப்படுகிறது. இதற்கிடையே அவரது வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆராய்ச்சி மாணவர் கருப்புசாமியை பிடித்தால் பல்வேறு தகவல்கள் கிடைக்கும் எதிர்ப்பார்க்கப்படுகிறது தலைமறைவாகி உள்ள அவரை போலீசார் நெருங்கி உள்ளதாகவும் இன்றைக்குள் அவர் பிடிபடுவார் என்றும் கூறப்படுகிறது.  இந்த நிலையில் மதுரை காமராஜ் பல்கலைக்கழக தொலைத் தூர கல்வி இயக்குனர் விஜயத்துறையை அழைத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்