பேட்டி பச்சோ” என்ற மோடியின் கோஷம் பா.ஜனதாவினரிடம் இருந்து சிறுமிகளை காப்பாற்றுங்கள் என்றாகிவிட்டது ராகுல் விமர்சனம்

- in டாப் நியூஸ்
89
Comments Off on பேட்டி பச்சோ” என்ற மோடியின் கோஷம் பா.ஜனதாவினரிடம் இருந்து சிறுமிகளை காப்பாற்றுங்கள் என்றாகிவிட்டது ராகுல் விமர்சனம்
புதுடெல்லி,
காங்கிரஸ் ‘அரசியலமைப்பை பாதுகாப்போம்’ என்ற பேரணியை தொடங்கி உள்ளது. பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆளும் பாரதீய ஜனதா மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்தார். ராகுல் காந்தி பேசுகையில், “தேசம் பற்றி எரிந்தாலும்; சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாலும்; சிறுபான்மையினரின் உரிமைகள் ஆபத்தின்கீழ் இருந்தாலும் பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்பதிலே ஆர்வமாக உள்ளார்,” என்று பேசினார்.
தலித்கள் உரிமை மற்றும் பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் பிரதமர் மோடியின் மீது கூர்மையான தாக்குதலை முன்வைத்த ராகுல் காந்தி, பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் அரசியலமைப்பின் மாண்புகள் கடும் ஆபத்தின்கீழ் உள்ளது, அதனை எங்களுடைய கட்சி அனுமதிக்காது என குறிப்பிட்டார். ராகுல் காந்தி பேசுகையில், “சுப்ரீம் கோர்ட்டு போன்ற அரசு அமைப்புகள் காலில் போட்டு மிதிக்கப்படுகிறது, பாராளுமன்றம் அரசாலே முடக்கப்படுகிறது. நிரவ் மோடி ஊழல் உள்பட முக்கிய விவகாரங்கள் பற்றி என்ன 15 நிமிடங்கள் மட்டும் பேசுவதற்கு அனுமதித்தால் போதும், மோடி நாட்டைவிட்டே ஓடிவிடுவார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கையின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் மட்டும் அரசு அமைப்புகளில் கால்பதிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். சிறுபான்மை பிரிவை சேர்ந்த மக்கள் மேற்கொள்ளும் தூய்மை பணியில் பிரதமர் மோடி ஆன்மிகத்தை பார்க்கிறார். ஆனால் அப்பிரிவை சேர்ந்த மக்களுக்கும், பெண்களுக்கும் அவருடைய மனதில் இடம் கிடையாது” என விமர்சனம் செய்தார்.
பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பிற வாக்குறுதிகள் பிரதமர் மோடியால் முன்வைக்கப்பட்டதை குறிப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, “மீண்டும் ஓட்டுக்காக வாக்குறுதிகளுடன் வருவார்,” என்றார்.
பிரதமர் மோடியின் முந்தைய கோஷம் “பேட்டி பச்சோ பேட்டி பதோ” (பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்) இப்போது பாரதீய ஜனதா மற்றும் அதன் தலைவர்களிடம் இருந்து பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என மாறிவிட்டது,” என கடுமையாக விமர்சனம் செய்தார். உன்னோவ்வில் சிறுமியை பா.ஜனதா எம்.எல்.ஏ. பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தை குறிப்பிட்டு பேசினார் ராகுல் காந்தி. தேசம் இப்போது எதிர்க்கொண்டு உள்ள பிரச்சனையை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே சரிசெய்ய முடியும் எனவும் குறிப்பிட்டார் ராகுல் காந்தி.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்