பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்து : எஸ்.வி.சேகர் முன் ஜாமின் கோரி மனு

- in டாப் நியூஸ்
85
Comments Off on பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்து : எஸ்.வி.சேகர் முன் ஜாமின் கோரி மனு

சென்னை:  பெண் பத்திரிக்கையாளர்கள் பற்றி அவதூறான கருத்தை பகிர்ந்த விவகாரத்தில் பாஜக நிர்வாகி எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில் முன்ஜாமின் கோரி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நான் கருத்தை படிக்காமல் பகிர்ந்ததாகவும், இதற்காக மன்னிப்பும் கேட்டுவிட்டதால் முன் ஜாமின் வழங்க வேண்டும் என்றும் எஸ்.வி. சேகர் மனுவில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெண் பத்திரிக்கையாளர் கன்னத்தை தட்டிய விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதனையடுத்து பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தனர். இதற்கிடையில் நடிகர் எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் தளத்தில் பெண் நிருபர்கள் பற்றி அவதூறு கருத்தை வெளியிட்டார். வரிக்கு வரி கொச்சையான வார்த்தைகளால் பெண் பத்திரிக்கையாளர்களை ஆபாச அர்ச்சனை செய்யும் அந்தப் பதிவு ஊடகத்துறையினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஆனால் அவர் பதிவை படிக்காமல் பகிர்ந்து விட்டேன் என்று மன்னிப்பு கேட்டதோடு, அந்தப் பதிவையும் தனது முகநூல் பக்கத்தில் இருந்து நீக்கினார். இருப்பினும் அவரது வீட்டு முன்பு பத்திரிகையாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில், சென்னை போலீஸ் கமிஷனரிடம் பெண் நிருபர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்த எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி புகார் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நெல்லை நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து அவர் மீது 4 பிரிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து எஸ்.வி.சேகர் தாம் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதால் தலைமறைவானார். எஸ்.வி.சேகர் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளையோ அல்லது நாளை மறுநாளோ நீதிபதி ஜெகதீஷ் சந்திரா அமர்வு முன்பு விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்