பெண்கள் குளிப்பதை பார்த்த துணை நடிகர் கைது

- in டாப் நியூஸ்
81
Comments Off on பெண்கள் குளிப்பதை பார்த்த துணை நடிகர் கைது

சென்னை: பெண்கள் குளிப்பதை எட்டிப் பார்த்த துணை நடிகர் கைது செய்யப்பட்டார். திருவாரூரை சேர்ந்தவர் வைரமூர்த்தி (29). இவர் கிண்டி ஈக்காட்டுதாங்கல் பூமகள் நகரில்  ரூம் எடுத்து தங்கி சோழிங்கநல்லூரில் உள்ள ஐடி  நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

சினிமாவிலும் துணை நடிகராக நடித்து வருகிறார். இவர் இருக்கும் வீட்டின் மாடி எதிரே பெண்கள் தங்கி  வேலைபார்க்கும் விடுதி உள்ளது. இந்த விடுதி பாத்ரூமில் குளிக்கும் பெண்களை வைரமூர்த்தி தினந்தோறும் திருட்டுத்தனமாக  எட்டி பார்த்து  வந்ததாக கூறப்படுகிறது.

இதை பெண்கள் பல முறை கண்டித்தபோதும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கோபமடைந்த பெண்கள் கூட்டாக சேர்ந்து கிண்டி காவல் நிலையத்தில் வைரமூர்த்தி மீது புகார்  கொடுத்தனர். போலீசார் வழக்குப்  பதிவு  செய்து  வைரமூர்த்தியை கைது செய்து சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்