பெங்களூரில் ஓடும் வேனில் கால்சென்டர் பெண் ஊழியர் கூட்டு பலாத்காரம்

- in சமூக சீர்கேடு
830
Comments Off on பெங்களூரில் ஓடும் வேனில் கால்சென்டர் பெண் ஊழியர் கூட்டு பலாத்காரம்

ஓடும் வேனில் கால்சென்டர் பெண் ஊழியர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் நிர்பயா ஓடும் பஸ்சில் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை நினைவுபடுத்துவதாக இச்சம்பவம் அமைந்துள்ளது.

இது இந்தியாவின் சிலிக்கான்வேலி என்று அழைக்கப்படும் பெங்களூரில் பணியாற்றும் ஐடி ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பெங்களூர்-ஒசூர் சாலையிலுள்ள ஒரு பி.பி.ஓவில் பணியாற்றுபவர் மத்திய பிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்த 23 வயது பெண். இவர் தனது சகோதரியுடன், எச்.எஸ்.ஆர் லே-அவுட் என்ற பகுதியிலுள்ள ஒரு பி.ஜி. ஹாஸ்டலில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.

கடந்த சனிக்கிழமை வேலையை முடித்துவிட்டு, எச்.எஸ்.ஆர் லே-அவுட் செல்வதற்காக, ஆட்டோ ஏதாவது கிடைக்குமா என்று ஒசூர் மெயின் ரோட்டில் காத்திருந்தார். அப்போது அவ்வழியாக டெம்போ டிராவலர் ஒன்று வந்துள்ளது. அதில் டிரைவரும், கிளீனரும் மட்டுமே இருந்துள்ளனர்.

கிளீனர் வெளியே எட்டி பார்த்தபடி, “நீங்கள் எங்கே போக வேண்டும்?” என்று கேட்டுள்ளார். இந்த பெண், எச்.எஸ்.ஆர் லே-அவுட் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

உடனடியாக, “அங்குதான் வேனும் செல்கிறது.. கம்மி ரேட்டுதான் வாருங்கள்” என்று அழைத்துள்ளார் கிளீனர். எனவே அப்பெண் வேனில் ஏறியுள்ளார்.

அப்போது, உடன் நின்றிருந்த தோழி, பஸ், ஆட்டோ எதிலாவது செல்.. தனியார் வேனை நம்பி செல்ல வேண்டாம் என்று தடுத்துள்ளார். ஆனால் இரவு நேரம் கடந்துகொண்டிருப்பதை சுட்டிக்காட்டிய அந்த கால்சென்டர் ஊழியர், வேனில் ஏறிவிட்டார்.

சில்க்போர்டு மேம்பாலம் வரை சரியான ரூட்டில் சென்ற வேன், திடீரென ரூட்டை மாற்றி, மடிவாளா நோக்கி பயணிக்க தொடங்கியது. ஏன் வண்டி எதிர்திசையில் செல்கிறது என்று அச்சத்தோடு அந்த பெண் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாய்ந்து வந்த கிளீனர், கத்தியை காண்பித்து அந்த பெண்ணை மிரட்டி சத்தம் போட்டால் குத்திவிடுவேன்.. பேசாமல் வா.. என்றுள்ளார்.

இதையடுத்து வேன், கோரமங்களா வழியாக, இந்திராநகர் நோக்கி அவுட்டர் ரிங்ரோடு வழியாக பயணித்துள்ளது. அப்போது, ஓடும் வேனில் முதலில் கிளீனரும், பிறகு டிரைவரும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர்.

இரவு 1 மணிவரை மாறி மாறி, பலாத்காரம் செய்த இருவரும், 1 மணியளவில் மடிவாளாவிலுள்ள பிரபல ஐயப்பா தேவஸ்தானம் அருகே அந்த பெண்ணை கீழே இறக்கிவிட்டு அதிவேகமாக வேனை கிளப்பி தப்பியோடிவிட்டனராம்.

முன்னதாக, அந்த, பெண்ணிடமிருந்து சிம்கார்டை பறித்ததோடு, பலாத்கார தகவலை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவோம் என்றும் மிரட்டி சென்றுள்ளனர்.

அதிர்ச்சியுடன், சகோதரியை பொதுதொலைபேசி ஒன்றில் இருந்து தொடர்புகொண்ட பெண் ஊழியர் நடந்த தகவலை கூறியுள்ளார்.

இதையடுத்து, சகோதரி விரைந்து வந்து, கடும் காயங்களோடு காணப்பட்ட அந்த பெண்ணை, செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். திங்கள்கிழமை காலையில் அந்த பெண் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனை நிர்வாகம் மடிவாளா போலீசாருக்கு தகவல் கொடுத்ததன்பேரில் பலாத்கார வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர்.

இருப்பினும் பத்திரிகைகளுக்கு அத்தகவலை போலீசார் தெரிவிக்கவில்லை. காலதாமதமாகவே ஊடகங்களுக்கு விஷயம் தெரியத்தொடங்கியுள்ளது. இந்த விவகாரத்தை மூடி மறைக்க மடிவாளா போலீசார் முயன்றதாகத் தெரிகிறது.

வேன் பயணித்த சாலைகளில் சம்பவத்தன்று பதிவான சிசிடிவி கேமரா வீடியோக்களை போலீசார் ஆய்வு செய்துவருகிறார்கள்.

இந்திராநகர் ஆர்.டி.ஓவில் பதிவான பதிவு எண் கொண்ட வேன் அது என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விரைவில் குற்றவாளிகளை பிடித்துவிடுவோம் என்று காவல்துறை கூறுகிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மனநல மருத்துவர்கள் உதவியுடன் கவுன்சலிங் தர காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது. சில்க்போர்ட் ஜங்ஷன் பல முக்கிய பகுதிகளை இணைக்கும் பகுதியாகும்.

ஒயிட்பீல்டு, எலக்ட்ரானிக் சிட்டி போன்ற ஐடி நிறுவனங்கள் குவிந்துள்ள பகுதிகளை இணைப்பது அந்த ஜங்ஷன். இது மடிவாளா காவல் நிலைய எல்லையில் உள்ளது.

இங்கு பஸ், ஆட்டோக்களை தவிர, தனியார் டெம்போக்கள் சட்டவிரோதமாக இயக்கப்படுகின்றன. இரவில் பஸ்கள் கிடைக்காத நிலையில், இதுபோன்ற வேன்களில் ஐடி ஊழியர்கள் ஏறி பயணிக்கிறார்கள்.

வேனில் பயணிகள் கூட்டம் இல்லை எனில், தனியாக சிக்கும் ஆண்களிடம், வேன் கிளீனர் மற்றும் டிரைவர் மற்றும் அவரது கோஷ்டியினர் செல்போன், பணம் பறிப்பது அவ்வப்போது நடக்கிறது.

ஆனால் இதுபோன்ற சட்ட விரோத வேன்கள் இயக்கத்தை மடிவாளா போலீசார் ‘மாமுலாக’ விட்டுவிடுகின்றனர் என்பதுதான் பிரச்சினை.

இந்த பலாத்கார சம்பவத்தில் கூட, குறிப்பிட்ட அந்த வேன், பெண்ணை கடத்திக்கொண்டு மடிவாளா சட்டம்-ஒழுங்கு மற்றும் டிராபிக் காவல் நிலையங்கள் முன்புதான் பயணித்துள்ளது.

ஆனால் சாதாரண டூவீலர்களை மடக்கி மடக்கி சோதனை என்ற பெயரில் காசு புடுங்கும் இந்த போலீசார், ஒரு கடத்தல்-பலாத்கார சம்பவம் நடந்த வேனை சர்வசாதாரணமாக கடக்க விட்டுள்ளனர்.

மடிவாளா, பேகூர் ரோடு உள்ளிட்ட ஒசூர் ரோடு பகுதிகளில் ரெளடித்தனமும் ஜாஸ்தி. இதையும் மடிவாளா போலீசார் கண்டு கொள்வது இல்லை.

Facebook Comments

You may also like

மனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பன் – அடித்து கொலை செய்த கணவன்

தனது மனைவியுடன் உல்லாசமாக இருந்த தனது நண்பனை, அப்பெண்ணின் கணவர்