புத்தாண்டு கொண்டாட்டம்: நட்சத்திர விடுதிகளுக்கு கட்டுப்பாடு

- in டாப் நியூஸ்
83
Comments Off on புத்தாண்டு கொண்டாட்டம்: நட்சத்திர விடுதிகளுக்கு கட்டுப்பாடு

சென்னை:புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நட்சத்திர விடுதி, கேளிக்கைகளுக்கு போலீஸ் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெரிவித்திருப்பதாவது: பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு விண்ணப்பித்து சிறப்பு உரிமம் பெற வேண்டும். நள்ளிரவு 1 மணியுடன் மது பான விருந்து மற்றும் கேளிக்கைகளை நிறுத்தி கொள்ள வேண்டும். குடிபோதையில் ஈடுபடுவர்களை அப்புறப்படுத்தப்பட்டு அவர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும். விடுதிக்கு வரும் வாகனங்கள் கேளிக்கை நிகழ்ச்சிகள் சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யவேண்டும்.
விடுதி நீச்சல் குளங்களை டிச31-ம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையில் மூடப்பட வேண்டும். நீச்சல் குளத்தின் மீதோ, அனுமதிபெறாத இடங்களின் மீதோ மேடை அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மது அருந்தியவர்களை அந்தந்த விடுதிகளே அவர்களின் வீடுகளில் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.விடுதிக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்