புதிய கேப்டன் என்ன செய்யப் போகிறார்… கொல்கத்தாவை சமாளிக்குமா டெல்லி

- in IPL LIVE, கிரிக்கெட்
142
Comments Off on புதிய கேப்டன் என்ன செய்யப் போகிறார்… கொல்கத்தாவை சமாளிக்குமா டெல்லி

டெல்லி: ஐபிஎல் போட்டியில் 6ல் 5 ஆட்டங்களில் தோல்வியடைந்ததுடன், கேப்டன் பதவியில் இருந்து கவுதம் கம்பீர் விலகியுள்ளதால் தடுமாற்றத்தில் உள்ள டெல்லி டேர்டெவில்ஸ் அணி, இன்று இரவு நடக்கும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகின்றது. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. 25 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

ஹைதராபாத், பஞ்சாப் ஆகியவை அடுத்த நிலையில் உள்ளன. புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கடைசி இடத்தில் உள்ள டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் டெல்லியில் நடக்கும் சீசனின் 27வது ஆட்டத்தில் விளையாடுகின்றன. இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி மும்பை அணியை மட்டுமே வென்றுள்ளது. பஞ்சாப் அணியுடன் இரண்டு முறை, ராஜஸ்தான், கொல்கத்தா, பெங்களூர் என, 5 ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளது. கம்பீர் விலகினார் கொல்கத்தா அணிக்காக கேப்டனாக இரண்டு முறை கோப்பையை வென்று தந்த கவுதம் கம்பீர் டெல்லி அணியின் கேப்டனாக இருந்தார். தோல்விகளுக்கு பொறுப்பேற்று கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகியுள்ளார்.

தாக்கு பிடிப்பாரா ஸ்ரேயாஸ் டெல்லி அணியின் 11வது கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டனாக அவர் சந்திக்கும் முதல் போட்டி என்பதால், இன்றைய போட்டி அவருக்கு வைக்கப்பட்டுள்ள டெஸ்டாகும். அதில் அவர் சாதிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சாதிப்பாரா தினேஷ் கொல்கத்தா அணி 6 ஆட்டங்களில் 3ல் வெற்றி, 3ல் தோல்வியுடன் 6 புள்ளிகளைப் பெற்று, புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

தமிழரான அஸ்வின் கேப்டனாக உள்ள பஞ்சாப் அணி சிறப்பாக விளையாடி வரும் நிலையில், மற்றொரு தமிழரான தினேஷ் கார்த்திக் கேப்டனாக உள்ள கொல்கத்தா அணி, பிளேஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. யாருக்கு வெற்றி புதிய கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயருக்கு இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் ஆட்டம் சோதனை களமாகும். அதே நேரத்தில் கேப்டனாக சாதிக்க தினேஷ் கார்த்திக்கு இன்றைய ஆட்டம் முக்கியமாகும். எந்த கேப்டன் சாதிக்கப் போகிறார் என்பதை இன்றைய ஆட்டம் நிர்ணயிக்கும்.

Facebook Comments

You may also like

தேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி

இந்திய அணியில் விளையாடும் வீரர்களின் உடற்தகுதியை சரிபார்க்க இந்திய கிரிக்கெட்