பிறந்த நாளில் சச்சின் டெண்டுல்கரை இதைவிட சிறப்பாக யாராலும் வாழ்த்த முடியாது!

- in கிரிக்கெட்
95
Comments Off on பிறந்த நாளில் சச்சின் டெண்டுல்கரை இதைவிட சிறப்பாக யாராலும் வாழ்த்த முடியாது!

மும்பை: சச்சின் டெண்டுல்கர். இந்தப் பெயரை உச்சரிக்காதவர்களே இருக்க முடியாது. உலக அளவில் கிரிக்கெட்டில் மிகப் பெரிய சாதனைகளைப் படைத்த சச்சினுக்கு இன்று 45வது பிறந்த நாள். அவருக்கு டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என்று பல வழிகளில் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். மும்பை போலீஸ் வாழ்த்து செய்திதான் அதில் அல்ட்ரா டாப் ரகம். இந்திய கிரி்க்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இன்று தனது 45வது பிறந்த நாளைக் கொண்டாடினார். பல்வேறு தரப்பினர் பிறந்த நாளுக்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதில் மும்பை போலீஸ் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்திதான் அனைவரையும் கவர்ந்துள்ளது. சச்சின் டெண்டுல்கர் ஹெல்மெட்டுடன் இருக்கும் மூன்று படங்களை வெளியிட்டு, கிரிக்கெட் கடவுளால் 1989ல் இருந்து அணியப்பட்டது. ஹேப்பி பர்த்தே சச்சின் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஹெல்மேட் அணிந்து லிட்டில் மாஸ்டர் பல சாதனைகளை படைத்துள்ளார். அவருடைய வழியை நீங்களும் பின்பற்றலாமே என்று அந்த வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மிகப் பெரிய கிரிக்கெட் வீரராக இருந்தாலும், சமூக அக்கறை கொண்டவர் சச்சின். ஒரு முறை காரில் பயணிக்கும்போது, தன்னை பார்த்த டூவீலரில் சென்றவரிடம் ஹெல்மெட் அணியுங்கள் என்று உரிமையுடன் கூறினார் சச்சின். பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வால், மல்யுத்த வீராங்கனை கீதா போகட், குத்துச்சண்டை வீரர் விஜயேந்தர் சிங் என்று மற்ற விளையாட்டு துறை வீரர்களும் சச்சினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். கிரிக்கெட்டை தாண்டி, ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும் ஏதோ ஒருவகையில் ஒரு சிறிய சலனத்தையாவது சச்சின் ஏற்படுத்தியிருப்பார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் இன்றும் அனைவராலும் நினைத்து பார்க்கக் கூடியவராக உள்ளார் நமது பாரத ரத்னா

Facebook Comments

You may also like

தேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி

இந்திய அணியில் விளையாடும் வீரர்களின் உடற்தகுதியை சரிபார்க்க இந்திய கிரிக்கெட்