பிரான்சில் 22 இந்திய சிறுவர்கள் மாயம்: சி.பி.ஐ., வழக்கு

- in டாப் நியூஸ்
299
Comments Off on பிரான்சில் 22 இந்திய சிறுவர்கள் மாயம்: சி.பி.ஐ., வழக்கு

 

புதுடில்லி: ரக்பி விளையாட்டு பயிற்சிக்காக பிரான்ஸ் அழைத்து செல்லப்பட்ட 22 இந்திய சிறுவர்கள் மாயமானது குறித்து சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்துள்ளது.

பணம் வசூல்

இது குறித்து சி.பி.ஐ., அதிகாரி ஒருவர் கூறுகையில், டில்லி, பஞ்சாப், அரியானா மாநிலங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள் 25 பேரை, பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடக்கும் ரக்பி விளையாட்டு பயிற்சிக்கு அழைத்து செல்வதாக, அவர்களின் பெற்றோரை பரீதாபாத், டில்லியை சேர்ந்த டிராவல் ஏஜென்ட்கள் அணுகினர். இதற்காக ஒவ்வொரு மாணவரின் பெற்றோரிடமிருந்து ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை பணம் வசூலித்துள்ளனர். தொடர்ந்து, 25 மாணவர்களும் பஞ்சாபை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் எனக்கூறி, பாரீஸ் அழைத்து சென்றனர்.

டிக்கெட் ரத்து

அங்கு ஒரு வாரம் பயிற்சி முகாமில் 25 மாணவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து ஏஜென்ட்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த 2 பேர் அங்கிருந்து தப்பி இந்தியா திரும்பினர். இதனையடுத்து 23 மாணவர்களின் நாடு திரும்புவதற்கான டிக்கெட்டை ஏஜென்ட்கள் ரத்து செய்தனர். இதனால் செய்வதறியாது தவித்த மாணவர்கள் அங்கள்ள குருத்வாராவில் வலுக்கட்டாயமாக தங்க வைக்கப்பட்டனர். அதன் பின்னர் அவர்களை காணவில்லை.

விசாரணைஅவர்களில் ஒருவரை கைது செய்த பிரெஞ்ச் போலீசார், அது குறித்து இண்டர்போல் போலீசுக்கு தகவல் அளித்தனர். அவர்கள், சி.பி.ஐ.,க்கு தகவல் கூறினர். அதனிப்படையில், சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமான பெற்றோர்களை தொடர்பு கொண்டு விவரங்களை பெற முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்