பிரபாஸுக்கு பிரச்சனை கொடுக்கிறாரா அருண் விஜய்?

- in சினிமா
85
Comments Off on பிரபாஸுக்கு பிரச்சனை கொடுக்கிறாரா அருண் விஜய்?

சென்னை: அருண் விஜய் தற்போது பிரபாஸின் சாஹோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அருண் விஜய் அடம் பிடிப்பது இல்லை. வரலட்சுமி சரத்குமாரை போன்று தன் கதாபாத்திரம் நன்றாக இருந்தால் உடனே நடிக்க ஒப்புக் கொள்கிறார். அவர் கொள்கையை மாற்றியதால் அவரை தேடி பட வாய்ப்புகள் வந்து குவிகின்றன.  Buy Tickets செக்கச் சிவந்த வானம் மணிரத்னம் இயக்கி வரும் செக்கச் சிவந்த வானம் படத்தில் அருண் விஜய் நடிக்கிறார்.

அவர் தனது போர்ஷனை நடித்து முடித்துவிட்டார். படப்பிடிப்பு தளத்தில் அவர் மணிரத்னத்துடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. பிரபாஸ் சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் சாஹோ படத்தில் அருண் விஜய் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். செக்கச் சிவந்த வானம் படப்பிடிப்பு முடித்த கையோடு அருண் விஜய் அபுதாபிக்கு கிளம்பிவிட்டார். ஷூட்டிங் சாஹோ படத்தின் படப்பிடிப்பு தற்போது அபுதாபியில் நடந்து கொண்டிருக்கிறது. சில முக்கியமான சண்டை காட்சிகளை அங்கு படமாக்கி வருகின்றனர். அபுதாபியில் இருந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அருண் விஜய்.

அருண் விஜய் சாஹோ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்கவில்லை என்று அருண் விஜய் தெரிவித்துள்ளார். அவர் கதாபாத்திரம் எந்த மாதிரியானது என்பதை மிகவும் ரகசியமாக வைத்துள்ளது படக்குழு. பாலக்குமாரன் எழுத்தாளர் பாலக்குமாரன் மறைவு குறித்து அறிந்த அருண் விஜய் கவலை அடைந்தார். அவரின் குடும்பத்தாருக்கு தனது ஆழந்த அனுதாபங்களை ட்விட்டரில் தெரிவித்துள்ளார் அவர்.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி