பியூகோ எரிமலை – வெடிப்புக்கு முன், வெடிப்புக்கு பின் எடுக்க பட்ட அதிரவைக்கும் புகைப்படம் !

- in டாப் நியூஸ்
73
Comments Off on பியூகோ எரிமலை – வெடிப்புக்கு முன், வெடிப்புக்கு பின் எடுக்க பட்ட அதிரவைக்கும் புகைப்படம் !
கவுதமாலா நாட்டில் தலைநகர் கவுதமாலா சிட்டி என்ற பகுதியில் இருந்து சுமார் 60 கிமீ தொலைவில் உள்ள பியூகோ எரிமலை வெடித்து சிதறியதில் பலியானோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இந்த எரிமலை வெடித்து சுமார் 10 கிமீ உயரம் வரை வானத்தில் பரவியுள்ளது. முதலில் 8 கிமீ பகுதியை ஆக்கிரமித்த இந்த எரிமலை குழம்புகள் இப்போது 12 கிமீ தூரம் வரை ஆக்கிரமித்துள்ளது.
எரிமலை வெடித்ததில் புகையும், எரிமலை குழம்பும் வேகமாக பரவியுள்ளது. இதனால் மக்கள் பலர் வேறு இடங்களுக்கு சென்றாலும், 109 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். மீட்பு பணிகள் நடந்து வருவதால், மேலும் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மேலும், இந்த எரிமலை வெடிப்பு காரணமாக மொத்த நகரமே அழிந்துள்ளது என கூறப்படுகிறது. இதன் பாதிப்பு முழுமையாக  எப்படி இருக்கிறது என்பது இன்னும் ஒரு வாரம் கழித்துதான் தெரியும் என கூறப்பட்டாலும், பியூகோ எரிமலை வெடிப்புக்கு முன்னரும் பின்னரும் இந்த இடம் எப்படி காட்சியளிக்கிறது என சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அவை….

 

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்