பியூகோ எரிமலை வெடிப்பில் சிக்கி 62 பேர் பலி !

- in டாப் நியூஸ்
48
Comments Off on பியூகோ எரிமலை வெடிப்பில் சிக்கி 62 பேர் பலி !
கவுதமாலா நாட்டில் உள்ள பியூகோ எரிமலை வெடித்ததில் பலி எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது. 
கவுதமாலா நாட்டில் தலைநகர் கவுதமாலா சிட்டிக்கு 40 கி.மீ தொலைவில் பியூகோ  பியூகோ எரிமலை திடீரென்று வெடித்து சிதறியுள்ளது. அதில் இருந்து 8 கி.மீ தொலைவிற்கு செந்நிற, வெப்பம் மிகுந்த லாவா வெளியேறி வருகிறது.
பாதுகாப்பு கருதி எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 3,100 பேர் வெளியேறியுள்ளனர்.
இந்த எரிமலையில் இருந்து வெளிவரும் லாவாவின் வெப்பம் 700 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என கூறப்படுகிறது. எரிமலை சாம்பல் 15 கி.மீ வரை பரவ கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணியாளர்கள் மாஸ்க் அணிந்தபடி எச்சரிக்கையுடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

 

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்