பிக்பாஸ் 2 நிகழ்ச்சியிலிருந்து விலகப்போகிறாரா பவர் ஸ்டார் ?

- in சினிமா
97
Comments Off on பிக்பாஸ் 2 நிகழ்ச்சியிலிருந்து விலகப்போகிறாரா பவர் ஸ்டார் ?
விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. அந்த நிகழ்ச்சி மூலம் ஓவியா உள்ளிட்ட சிலர் மக்களிடையே பிரபலமானார்கள். இதனால், அவர்களுக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது.
அந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக அதன் 2ம் பாகத்தையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் தாடி பாலாஜி, தாடி பாலாஜியின் மனைவி நித்யா, நடிகை ஜனனி ஐயர்,நடிகை யாஷிகா ஆனந்த், நடிகை மும்தாஜ், நடிகர் பொன்னம்பலம், நடிகர் செண்ட்ராயன், நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியிலிருந்து பவர்ஸ்டார் சீனிவாசன் விலக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதற்கான காரணம் சம்பள விவகாரம் எனக்கூறப்படுகிறது. பிரபலங்களை பொறுத்து அவர்களுக்கான சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. அதற்கான ஒப்பந்தங்களும் போடப்படுகிறது.
ஆனால், பேசப்பட்ட தொகை முழுதாக கொடுக்கப்படுகிறதா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக விஜய் தொலைக்காட்சி தரப்பில்  சரியான பதில் கிடைக்காததால், கடைசி பவர்ஸ்டார் சீனிவாசன் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால், இந்த தகவலை இன்னும் அவர் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி