பா.ஜ., அறிக்கையில் பொய்: ராகுல்

- in டாப் நியூஸ்
93
Comments Off on பா.ஜ., அறிக்கையில் பொய்: ராகுல்

கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு மங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சி தலைவர் ராகுல் வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது: தேர்தல் அறிக்கையில் நாங்கள் கூறியுள்ளதை நிறைவேற்றுவோம். கடந்த அறிக்கையில் கூறப்பட்டதில் 95 சதவீதம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 5 வருட ஆட்சியில் நாங்கள் உறுதியளித்த விஷயங்கள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம்.

உறுதி கிடையாது

பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையை குறிப்பிட்ட 3 அல்லது 4 பேர் மட்டுமே முடிவு செய்வார்கள். அதில் பொய்கள் மறைக்கப்பட்டிருக்கும். ரெட்டி சகோதரர்களின் கொள்கைகள் மறைக்கப்பட்டிருக்கும். கர்நாடக மக்களின் குரலாக பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கை இருக்காது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் குரலாக இருக்கும். மோடியும், பா.ஜ.,வும் தாங்கள் சொன்னதில் உறுதியாக இருக்க மாட்டார்கள்.

வளர்ச்சி

ஒவ்வொரு மாவட்டத்தின் குரல்கள் மதிப்பு மற்றும் மரியாதை இல்லாமல், இருந்தால் வளர்ச்சியடையாது. கர்நாடக மக்களுக்கு என்ன தேவை என அவர்களிடம் கேட்டுள்ளோம். எங்களின் அறிக்கை கர்நாடக மக்களின் மன் கி பாத் ஆக இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்