‘பார்லி.,யில் செக்ஸ் கொடுமை’: ரேணுகா புகாரால் திடீர் சர்ச்சை

- in ஸ்மைல் ப்ளீஸ்
78
Comments Off on ‘பார்லி.,யில் செக்ஸ் கொடுமை’: ரேணுகா புகாரால் திடீர் சர்ச்சை

புதுடில்லி:”உயர் பதவியில் இருப்போர், தங்கள் கீழ் பணியாற்றும் பெண்களிடம், பாலியல் ரீதியில் அனுகூலங்களை பெறுவது, சினிமா துறையில் மட்டும் அல்லாது பார்லிமென்டிலும் பரவலாக நடைமுறையில் உள்ளது,” என, காங்., மூத்த தலைவர், ரேணுகா சவுத்ரி கூறியுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சினிமா துறையில் பிரபல பெண் நடன அமைப்பாளராக திகழும், சரோஜ் கான், நேற்று கூறியதாவது:சினிமா துறையில் உள்ள பிரபலங்கள், தங்கள் கீழ் பணியாற்றும் பெண்களிடம், பாலியல் ரீதியில் அனுகூலங்களை பெறுவது, சாதாரணமாக நடக்கிறது. இத்துறையில், பெண்களின் சம்மதத்துடன், இது நடக்கிறது. பெண்கள், பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டு, கைவிடப்படவில்லை.
அவர்கள் பிழைக்க, வேலை வாய்ப்பு கிடைக்கிறது; பலருக்கு வேலை கிடைத்து வருவ தால், இதில் தவறேதும் இருப்பதாக தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, தன் கருத்தை, அவர் வாபஸ் பெற்றார்.இது குறித்து, காங்., மூத்த தலைவரும், ராஜ்யசபா முன்னாள் உறுப்பினருமான, ரேணுகா சவுத்ரி கூறியதாவது:

தங்கள் கீழ் பணியாற்றும் பெண்களிடம், பாலியல் ரீதியில் அனுகூலம் பெறுதல், சினிமா துறையில் மட்டுமே இருப்பதாக கூறமுடியாது. பார்லிமென்ட் உள்ளிட்ட பிற இடங்களிலும், இது பரவலாக அரங்கேறி வருகிறது. இது, மறுக்க முடியாத, கசப்பான உண்மை.இந்த கொடுமைக்கு எதிராக, இந்தியா துணிந்து நிற்க வேண்டும், ‘நானும் இதனால் பாதிக்கப்பட்டேன்’ என, பெண்கள் துணிச்சலுடன் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த விவகாரம், பலதரப்பில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Facebook Comments

You may also like

இன்றைய ராசிபலன் (23-06-2018)!

மேஷம் இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும்.