பாரதீய ஜனதா தலைவர்களுக்கு வாய்ப்பூட்டு: மோடி மீது சிவசேனா பாய்ச்சல்பாரதீய ஜனதா தலைவர்களுக்கு வாய்ப்பூட்டு: மோடி மீது சிவசேனா பாய்ச்சல்

- in டாப் நியூஸ்
105
Comments Off on பாரதீய ஜனதா தலைவர்களுக்கு வாய்ப்பூட்டு: மோடி மீது சிவசேனா பாய்ச்சல்பாரதீய ஜனதா தலைவர்களுக்கு வாய்ப்பூட்டு: மோடி மீது சிவசேனா பாய்ச்சல்
மும்பை,
அண்மைக்காலமாக பா.ஜனதா தலைவர்கள் சிலரின் பேச்சுகள் சர்ச்சையை உருவாக்கும் விதமாக அமைந்துள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் பிரதமர் மோடி, தனது கட்சி எம்.பிக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினார். அதாவது, கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி தனது நமோ ஆப்ஸ் மூலம், பாஜக  எம்.பி.க்களுக்கு அறிவுரை கூறினார்.
அதில், எம்.பி.க்கள் எந்த விஷயத்தையும் ஆய்வு செய்யாமல், பொறுப்பற்ற முறையில் பேசக்கூடாது.  நாம் தொடர்ந்து தவறுகள் செய்வதன் மூலம் ஊடகங்களுக்கு தீனி போட்டு வருகிறோம். ஊடகங்களின் கேமரா முன்பாக ஏதோ சமூக விஞ்ஞானிகள் போலவும்,  ஆய்வாளர்கள் போலவும் வார்த்தைகளை கொட்டுகிறோம். இது நம்மை சிக்க வைத்து விடுகிறது.   இவ்வாறு பேசுவது கட்சியின் தோற்றத்தை மக்கள் மத்தியில் குறைத்து அவப்பெயரை ஏற்படுத்திவிடும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், சிவசேனா கட்சி  தனது அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் மோடியின் கருத்தை விமர்சித்துள்ளது. சாம்னாவின் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
பிரதமர் மோடி எம்.பி.க்களுக்கு சமீபத்தில் அறிவுரை கூறினார். யாரும் பொறுப்பற்ற முறையில் பேசாதீர்கள், வீணாகப்பேசும் வார்த்தைகள் ஊடகங்கள் செய்திக்கு மசாலா சேர்த்தது போன்று அமைந்துவிடுகிறது. இதனால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. மக்கள் மத்தியில் கட்சியின் மரியாதையான தோற்றம் குறைந்து வருகிறது என்று தெரிவித்தார்.ஆனால், இதுபோன்ற அறிவுரைகளைப் பிரதமர் மோடி இதற்கு முன் தனது எம்.பி.க்களுக்கு பல முறை கூறியிருக்கிறார்.  பாஜக எம்.பி.க்கள் அனைவரும் பிரதமர் மோடி பேசுவதைப் பார்த்து, அவரைப் பின்பற்றி அப்படியே பேசுகிறார்கள். அதாவது, பிரதமர் மோடி தனது சிந்தனையில் என்ன தோன்றுகிறதோ, அதை ஆய்வு செய்யாமல் பேசுகிறார், அதைப்போலவே எம்.பி.க்களும் பேசுகிறார்கள்.
மோடியின் பேச்சு இன்னும் ஊடகங்களின் செய்திக்கு மசாலா சேர்ப்பதுபோன்று தான் இருக்கிறது. இப்போது, ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் ஊடகங்களுக்குக் கூடுதல் மசாலாவும், ஊறுகாயும், அப்பளமும் தருகிறார்கள். நாட்டில் நடக்கும் பலாத்கார சம்பவங்கள் குறித்து மத்திய அமைச்சர் சந்தோஷ் கெங்வார் பொறுப்பற்று பேசியுள்ளார். ‘இரண்டு பலாத்கார சம்பவங்களை எல்லாம் பெரிதாக்காதீர்கள். இந்தியா மிகப்பெரியநாடு’ என அவர் தெரிவித்திருக்கிறார். ஏன் இதுவரை அவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எந்தக் கட்சியும் கோரவில்லை. அமைச்சர் கெங்வாரின் கருத்து பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் இருக்கிறது” இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்