பாட்ஷா’வுடன் கனெக்சன் ஆகும் ரஜினி-ரஞ்சித் படம்

- in சினிமா
176
Comments Off on பாட்ஷா’வுடன் கனெக்சன் ஆகும் ரஜினி-ரஞ்சித் படம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ரஞ்சித் இயக்கிய ‘கபாலி’ திரைப்படம் உலகம் முழுவதும் சாதனை வசூல் புரிந்த நிலையில் மீண்டும் ரஜினி நடிக்கும் படத்தை அவர் இயக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.
இந்நிலையில் இந்த படத்தின் லொகேஷனுக்காக ரஞ்சித் சமீபத்தில் மும்பை சென்று வந்ததாகவும், எனவே இந்த படத்தின் கதை பின்னணி மும்பையாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ரஜினியின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான ‘பாட்ஷா’ திரைப்படமும் மும்பை பின்னணியை கொண்ட கதையம்சம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி, ரஞ்சித், தனுஷ் ஆகிய மூவரும் இணையும் இந்த படம் ‘பாட்ஷா’வுக்கு இணையாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி