பாகுபலி படத்தில் திரைக்குப் பின்னால் நடந்த ஜீபூம்பா ரகசியம் இதோ…

- in பல்சுவை
175
Comments Off on பாகுபலி படத்தில் திரைக்குப் பின்னால் நடந்த ஜீபூம்பா ரகசியம் இதோ…

கடந்த சில வாரங்களாகவே, இந்தியாவிலும் உலகின் ஒரு சில பகுதிகளிலும் ‘பாகுபலி’ என்ற வார்த்தை தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது. புகழ்பெற்ற தெலுங்கு இயக்குனரான எஸ் எஸ் ராஜமௌலி முழு வீச்சுடன் செயல்பட்டு ஒரு பிரம்மாண்டமான படைப்பை வெளியிட விரும்பினார். அப்படிப்பட்ட ஒரு தலைசிறந்த படைப்புதான் பாகுபலி.

முதல் பாகமான பாகுபலி – தொடக்கம் (முதல் பகுதி) ஜூலை மாதம் 2015-ம் ஆண்டு வெளியானது. பாகுபலி – இறுதிப் பகுதி (conclusion) கடந்த வாரம் 28-ம் தேதி தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. அமீர்கானின் PK மற்றும் தங்கல் படத்திற்குப் பிறகு பாகுபலி முதல் பாகம்தான் அதிகத் தொகையை வசூல் செய்தது.

அற்புதமான கதையமைப்பு இருந்தபோதும் பிரம்மாண்டமான செட் மற்றும் படப்பிடிப்பிற்கான ஸ்டுடியோ அமைப்பது போன்ற பணிகள் எளிதில் சாத்தியப்படும் வகையில் இல்லை. எனவே பிரபலமான இயக்குனர்கள் அனைவரும் தேர்ந்தெடுக்கும் ஒரே வழியான விஷுவல் எஃபெக்ட்ஸை (VFX) இவர்களும் தேர்ந்தெடுத்தனர்.

இந்தத் திரைப்படத்தின் இயக்குனர் கலிஃபோர்னியாவின் சாண்டா க்ளாராவைச் சேர்ந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் நிறுவனமான மகுதா விஎஃப்எக்ஸ்-உடன் இணைந்து செயல்பட்டார். மகுதா விஎஃப்எக்ஸ் கிளை நிறுவனம் ஹைதராபாத்தில் உள்ளது. இதன் இணை நிறுவனரான Pete Draper யுவர் ஸ்டோரிக்கு பிரத்யேக பேட்டியளிக்கையில்,

இந்திய திரைப்படங்களில் முதல் முறையாக பாகுபலி திரைப்படத்தில் இப்படிப்பட்ட தொழில்நுட்ப முறை பின்பற்றப்பட்டுள்ளது. ஹாலிவுட், பிரிட்டிஷ் சினிமா போன்றவற்றில் மட்டுமே இந்த முறை பயன்பாட்டில் இருந்தது. பாகுபலி இரண்டாம் பாகம் பார்ப்பவர்கள் கண்களுக்கு விருந்தாக அமையும்.

ஏனெனில் முதல் பாகத்தைக் காட்டிலும் தரத்திலும் நுணுக்கங்களிலும் பத்து மடங்கு அதிகரித்திருப்பதை உணரமுடியும். பல நுணுக்கங்களில் கவனம் செலுத்தப்பட்டு காட்சிகள் ஒருங்கிணைப்பட்டுள்ளது. குறைவான நேரத்தில் அதிக தரத்தை வழங்கவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு நாங்கள் மிகக் கடுமையாக உழைத்துள்ளோம்.

இந்திய சினிமா இப்படிப்பட்ட தொழில்நுட்பங்களை விஷுவல் எஃபெக்டுகளுக்கும் சிறப்பு எஃபெக்டுகளுக்கும் பயன்படுத்துவது நம்பிக்கையளிப்பதாக தெரிவித்தார் Pete. இதில் முன்னோடியாகத் திகழவேண்டுமெனில் கம்ப்யூட்டர் துணையுடன் உருவாக்கப்படும் வரைகலை தொழில்நுட்பப் பிரிவு (CGI) தரத்தில் சற்றும் சமரசம் செய்துகொள்ளாமல் குறைகளின்றி திறம்பட செயல்படவேண்டும். பாகுபலி என்கிற உலகை வெளிப்படுத்த எடுத்துக்கொள்ளப்பட்ட நேரமும் முயற்சியும் குழுவின் கடின உழைப்பை வெளிப்படுத்துகிறது. அந்த உழைப்பு முதல் பாகத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

65 நபர்களைக் கொண்ட மகுதா VFX குழுவினர் தங்களது முழு திறனையும் பயன்படுத்தி நான்கு வருடங்களுக்கும் மேலாக ஓய்வின்றி உழைத்தனர். இரண்டாம் பாகத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் நேரத்தில் கிட்டத்தட்ட 15 மாதங்கள் அயராது உழைத்தனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த AMD, Inc எனும் புகழ்பெற்ற செமிகண்டக்டர் பன்னாட்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டோம். அவர்கள் எங்களுக்கு முழு ஆதரவளித்தனர். ஹை-எண்ட் க்ராஃபிக்ஸில் உதவினர். சிற்பங்கள், ஆர்கானிக் வடிவங்கள் ஆகியவற்றிற்கு ஒன்றாக விஷுவல் எஃபெக்ட் அளிக்கையில் நாங்கள் 3D அனிமேஷன் போன்ற பல்வேறு சாஃப்ட்வேர்களை பயன்படுத்தினோம். எங்களது முறையை பயன்படுத்துகையில் அதிக சேமிப்பிடம் தேவைப்பட்டது. இப்படிப்பட்ட ஸ்டோரேஜ் பிரச்சனைகளுக்குத் தீர்வாக AMD புதிய சிஸ்டம்களை வழங்கியது. இறுதி தயாரிப்பை முழுமையாக்கும் பணியில் எங்களது இண்டர்னெல் ட்ராக்கிங் சிஸ்டம் மிகப்பெரிய பங்கு வகித்தது.

படத்தை உருவாக்கியவர்கள் AMD இந்தியாவுடன் இணைந்து பாகுபலி இரண்டாம் பாகத்திற்கான மெய்நிகர் உண்மை (VR) அனுபவத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். திரைப்படத்தில் வரும் இடங்கள் குறித்த ரியல் டைம் அனுபவத்தை இந்த ஆறு நிமிட வீடியோ பார்வையாளர்களுக்கு அளிக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் இதை கூகுள் கார்ட்போர்ட் VR உதவியுடன் வீட்டிலிருந்தே கண்டு களிக்கலாம்.

படத்தின் தெளிவிற்காக மேம்பட்ட 4K ரிசல்யூஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர். இது குறித்து Pete கூறுகையில்,

ஸ்டான்டர்ட் டெஃபனிஷன் படத்துடன் ஒப்பிடுகையில் நான்கு மடங்கு அதிக இடம் தேவைப்படும் என்பதால் 4K தொழில்நுட்பம் விலையுயர்ந்ததாகும். நம் வீடுகளில் டிஷ் டிவியில் பார்க்கும் படத்தின் தெளிவுடன் இதனை ஒப்பிடலாம். ஸ்டாண்டர்ட் டெஃபனிஷன் பேக்கேஜ் மற்றும் ஹை டெஃபனிஷன் பேக்கேஜ் ஆகியவற்றை ஒப்பிடுகையில் நமக்கு நிச்சயம் வித்தியாசம் தெரியும். எச்டி வெர்ஷனைவிட இரு மடங்கு அதிகமானது 4K ரிசல்யூஷன். க்ரிஸ்டல் போல முற்றிலும் தெளிவாக இருக்கும்.

கிடைமட்டமாகவும் செங்குத்தாகவும் படத்தின் அளவு இரு மடங்காக அதிகரிப்பதால் மிக நுணுக்கமான தெளிவு கிடைக்கும். செட்டில் படப்பிடிப்பு நடக்கும்போதும் முறையாக கேமிராவில் ஃபோகஸ் செய்யப்படுவதை உறுதிசெய்கிறோம், என்றார்.

திரைப்படத்திற்கான கடின உழைப்பு குறித்தும் அவருக்குக் கிடைத்த திருப்தி குறித்தும் Pete கூறுகையில்,

ஒரு கலைஞர் எப்போதுமே திருப்தியடைந்துவிட முடியாது. இயக்குனர், ஒளிப்பதிவாளர், நடிகர்கள் என அனைவரும் நிச்சயம் திருப்தியடைந்திருப்பார்கள் என்று என்னால் உறுதியாக சொல்லமுடியும். நீங்கள் எனக்கு 15, 20 அல்லது 30 ஆண்டுகாலம் கொடுத்தாலும் நான் தொடர்ந்து பணிபுரிந்துகொண்டே இருப்பேன். ஆனால் திருப்தியடையவே மாட்டேன்.

கலைஞர்கள் தங்களது பணியைக் குறித்து தாங்களே விமர்சித்தவண்ணம் இருக்க வேண்டும். ஒரு பணியை முடித்தவுடன் ’இதுநாள் வரை நான் செய்த பணிகளிலேயே மிகச்சிறந்தது இதுதான்’ என்ற உணர்வு உங்களுக்கு ஏற்படும். ஆனால் சில மாதங்கள் கழித்து ‘நான் இப்படி செய்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்’ என்று நீங்களே சொல்வீர்கள். உங்களது கற்றல் அதிகரிக்கும்போது ஆய்வு செய்யும் திறனும் கலைஞனாக மேம்படும் திறனும் அதிகரிக்கும். இறுதியாக அதிக படைப்புத்திறன் கொண்டவராக இருக்கவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு ஏற்படும் என்று விளக்கினார்.

திரைப்படக்குழுவினர் அனைவரும் கடந்த சில வருடங்களாகவே முழு முயற்சியுடன் பொறுமையாகவும் உறுதியாகவும் பணியாற்றி வருகின்றனர். ஏற்கெனவெ இத்திரைப்படத்தின் முதல் பாகம் எண்ணற்ற பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இதன் இரண்டாம் பாகம் மேலும் பல சாதனைகளை வெல்ல உள்ளது. குறிப்பாக ’கட்டப்பாக ஏன் பாகுபலியைக் கொன்றார்?’ என்பதைத் தெரிந்துகொள்ள ஒட்டுமொத்த நாடும் ஆர்வமாக உள்ளது.

Facebook Comments

You may also like

இன்றைய ராசிபலன் (23-06-2018)!

மேஷம் இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும்.