பாகிஸ்தானுக்கு செருப்பு: பா.ஜ., வினோத பரிசு

- in டாப் நியூஸ்
73
Comments Off on பாகிஸ்தானுக்கு செருப்பு: பா.ஜ., வினோத பரிசு

புதுடில்லி : உளவு பார்த்ததாக பாகிஸ்தானால் துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள, நம் கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்புஷண் ஜாதவை சந்திக்க சென்ற அவருடைய மனைவி மற்றும் தாய்க்கு இழைக்கப்பட்ட அவமானத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானுக்கு செருப்பு அனுப்பும் போராட்டத்தை, டில்லியைச் சேர்ந்த, பா.ஜ., பிரமுகர் துவக்கியுள்ளார்.

உளவு பார்த்ததாக, நம் கடற்படை முன்னாள் அதிகாரி, குல்பூஷண் ஜாதவை, பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. அவருக்கு அந்த நாட்டு ராணுவம் விதித்த துாக்கு தண்டனையை, சர்வதேச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் அவரை சந்திக்க அவருடைய மனைவி மற்றும் தாய்க்கு பாகிஸ்தான் அனுமதி அளித்தது. அந்த சந்திப்பின்போது, புடவையை மாற்றச் சொன்னது, தாலி, குங்குமத்தை களையச் சொன்னது போன்ற பாகிஸ்தான் அரசின் செயல்பாடுகளுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், கேமரா போன்ற பொருளை வைத்திருந்ததாக, ஜாதவின் மனைவியின் செருப்பை பாகிஸ்தான் அரசு சோதனைக்கு அனுப்பியுள்ளது. இதற்கு பார்லிமென்டில் மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தானின் செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், டில்லியில் உள்ள பாகிஸ்தான் துாதருக்கு செருப்பு அனுப்பும் போராட்டத்தை, டில்லியைச் சேர்ந்த, பா.ஜ., செய்தி தொடர்பாளர் தஜிந்தர் பக்கா துவக்கியுள்ளார்.

இது குறித்து, ‘டுவிட்டர்’ சமூகதளத்தில் அவர் கூறியுள்ளதாவது: பாகிஸ்தானுக்கு செருப்பு தேவைப்படுகிறது. அதனால்தான், குல்பூஷண் ஜாதவ் மனைவியின் செருப்பை அவர்கள் எடுத்துக் கொண்டுள்ளனர். அதனால், பாகிஸ்தான் துாதருக்கு செருப்பு அனுப்ப ஆன்லைனில் பதிவு செய்துள்ளேன். மற்றவர்களும், இதேபோல் பாகிஸ்தானுக்கு செருப்பு அனுப்பி, அதை டுவிட்டரில் பதிவு செய்யலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்