பலாத்காரம், கிறிஸ்தவ மிஷனரி: அமைச்சர்கள் சர்ச்சை பேச்சு

- in டாப் நியூஸ்
79
Comments Off on பலாத்காரம், கிறிஸ்தவ மிஷனரி: அமைச்சர்கள் சர்ச்சை பேச்சு

புதுடில்லி : பலாத்காரம் குறித்தும் கிறிஸ்தவ மிஷனரி குறித்தும் பா.ஜ., எம்.பி.,க்கள் இருவர் கூறிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

பலாத்காரத்தை தடுப்பது சிரமம்:

டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், மத்திய நிதித்துறை இணை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, சந்தோஷ் குமார் கங்வார் பேசியதாவது: சிறுமியர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்படுவது துரதிர்ஷ்டவசமானது. மிகப்பெரும் நாடான இந்தியாவில், இதுபோன்ற குற்றங்களை தடுப்பதில் சிரமங்கள் உள்ளன. அரசு மிகக் கடும் சட்டங்களை இயற்றினாலும், குற்றம் செய்வோரிடம் மனமாற்றம் ஏற்பட்டால் மட்டுமே, இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார்.

 

கிறிஸ்தவ மிஷனரிகளால் ஆபத்து:

ம.பி., மாநிலம் பாலியாவில் அம்மாநிலத்தை சேர்ந்த பா.ஜ., எம்.பி., பாரத் சிங் பேசியதாவது: காங்., கட்சி கிறிஸ்தவ மிஷனரி கட்டுப்பாட்டில் உள்ளது. அதன் வழிகாட்டுதல் படியே ராகுலும் சோனியாவும் செயல்படுகின்றனர். இந்த கிறிஸ்தவ மிஷனரிகளால் நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்து உருவாகியுள்ளது. நாட்டில் அம்பேத்கர் சிலை சேதப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் மிஷனரிகளின் சதி இருப்பதாக சந்தேகம் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர்களின் இந்த பேச்சு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்