புதுடில்லி: பயங்கரவாதிகளுக்கு ஆதரவு மற்றும் நிதி தருவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என இந்தியா கூறியுள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தின் டிஜிஎம்ஓ ஷாகிர் மிர்சா, இந்திய ராணுவத்தின் டிஜிஎம்ஓ லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகானை ஹாட்லைன் மூலம் தொடர்பு கொண்டு இந்திய ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவதாகவும், இதனால், பதற்றம் அதிகரிப்பதாகவும் கூறினார்.
இது தொடர்பாக இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த பேச்சின் போது, எல்லை தாண்டி இந்திய நிலைகள் மீது கன ரக ஆயுதங்களால் தாக்குதலில் ஈடுபட பயங்கரவாதிகளை காஷ்மீருக்குள் ஊடுருவ செய்ய பாகிஸ்தான் ராணுவம் நடத்தும் தாக்குதலுக்கு மட்டுமே, இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல் அளிக்கிறது. பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு தருவதை ஏற்க முடியாது. பயங்கரவாதிகளுக்கு ஆதரவு மற்றும் நிதி தருவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும். அதுவரை உரிய பதிலடி தருவதை இந்திய ராணுவம் தொடரும் என உறுதியாக தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.