பயங்கரவாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை: சுஷ்மா

- in டாப் நியூஸ்
91
Comments Off on பயங்கரவாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை: சுஷ்மா

மனித நேயத்திற்கு எதிரானது

சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் சுஷ்மா பேசியதாவது:

இன்று உலகம் பல சவால்களை சந்தித்து வருகிறது. அதில் முக்கியமானது சர்வதேச பயங்கரவாதம். இதனை சமாளிக்க வலிமையான பாதுகாப்பு உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அடிப்படை மனித உரிமை, அமைதி மற்றும் பரஸ்பர நம்பிக்கைக்கு விரோதமானதாக பயங்கரவாதம் உள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில், பயங்கரவாதிகளை ஒழிப்பதுடன் மட்டுமல்லாமல், அவர்களுக்கு ஆதரவு, ஊக்கம், நிதி மற்றும் புகலிடம் அளிக்கும் நாடுகளை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒன்று சேர வேண்டும்

அப்பாவிகளை கொல்வதும், துன்புறுத்துவதும் மனித நேயத்திற்கு எதிரானது. உலகிலிருந்து அகற்ற நாம் இணைந்து இந்த கொடூரத்தை அகற்ற வேண்டும். இதற்காக வேற்றுமைகளை மறந்து ஒன்று சேர்ந்து, பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த மாநாட்டில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர், சீன வெளியுறவு அமைச்சரும் கலந்து கொண்டனர்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்