பட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்

- in சமூக சீர்கேடு, சினிமா
52
Comments Off on பட விழாவில் பாலியல் பலாத்காரம் செய்தார் – தயாரிப்பாளர் மீது நடிகை புகார்
பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது நடிகைகள் பாலியல் புகார் கூறுவது தொடர்ந்து கொண்டே வருகிறது.

தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது நடிகை ஏஞ்சலினா ஜோலி உட்பட 80க்கும் மேற்பட்ட பல ஹாலிவுட் நடிகைகள் ஏற்கனவே பாலியல் புகார்களை கூறியுள்ளனர்.  வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகள் முதல், பிரபலமான நடிகைகள் பலரும் இவரின் பாலியல் இச்சைக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், இத்தாலி நடிகை ஆசியா அர்ஜெண்டோவும் ஹார்வி மீது பாலியல் புகார் கூறியுள்ளார். சமீபத்தில் கேன்ஸ் நகரில் நடைபெற்ற திரைப்பட விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

இதே கேன்ஸ் நகரில் 1997ம் ஆண்டும் ஹார்வி என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அப்போது எனக்கு 21 வயது. இந்த திரைப்பட விழாவில்தான் அவர் நடிகைகளை தேடிப்பிடித்து கை வைப்பார். ஹோட்டலில் தங்கியிருந்த என்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். அவரை எதிர்த்து என்னால் எதுவும் செய்யமுடியவில்லை. அடுத்த 5 வருடம் அவர் கூறிய படியே நடக்க வேண்டியதாயிற்று. என் சினிமா வாழ்க்கையை அவர் சீரழித்து விடுவார் என பயந்தேன். ஆனால், தற்போது அவரை பற்றி எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. இனிமேல் அவரால் இந்த விழாவிற்கு வர முடியாது” என கொட்டித் தீர்த்தார்.
இவரின் புகாரை வழக்கம் போல் ஹார்வி தரப்பு மறுத்துள்ளது.

 

Facebook Comments

You may also like

ரஜினி இனி அரசியல் படங்களில் நடிக போவதில்லை என தகவல் !

ரஜினி இனி தான் நடிக்கும் படங்களில் அரசியல் இடம்பெறக் கூடாது