பட வாய்ப்புக்காக யாரையும் கெஞ்ச மாட்டேன்: நடிகை இலியானா

- in Featured, சினிமா
98
Comments Off on பட வாய்ப்புக்காக யாரையும் கெஞ்ச மாட்டேன்: நடிகை இலியானா

பட வாய்ப்புக்காக யாரையும் கெஞ்ச மாட்டேன் என நடிகை இலியானா தெரிவித்திருக்கிறார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அக்‌ஷய்குமாருடன், நடிகை இலியானா சமீபத்தில் இணைந்து நடித்த ‘ருஸ்டம்’ படம் வசூலைக் குவித்தது. அதன் பிறகு பாலிவுட்டில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இலியானா இப்போது ‘பாத்சாஹோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை இலியானா சமீபத்தில் பட விழாவொன்றில் கலந்து கொண்டு பேசுகையில் “பாலிவுட்டில் நடிப்பது மிகவும் பிடிக்கும். ஆனால் வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம். கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டால் அது நம்மை உயர்த்தும். இல்லையென்றால் பாலிவுட் மொத்தமாக நம்மை சினிமாவை விட்டே துரத்தி விடும். நான் படவாய்ப்பு இல்லை என்றாலும் போய் வாய்ப்புக்காக கெஞ்ச மாட்டேன். கையேந்தி நிற்க மாட்டேன்” என்றார்.

தெலுங்கின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வந்த இலியானா தற்போது தெலுங்கிலும் வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி