படுக்கையை பகிர்ந்தால் வாய்ப்பு என சொன்ன இயக்குனருக்கு நடிகை கொடுத்த பரிசு

- in சினிமா, டோன்ட் மிஸ்
189
Comments Off on படுக்கையை பகிர்ந்தால் வாய்ப்பு என சொன்ன இயக்குனருக்கு நடிகை கொடுத்த பரிசு

மும்பையில் முத்தம் கொடுத்த உதவி இயக்குனரை டி.வி. நடிகை கன்னத்தில் ஓங்கி அறைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்த பிரபல இந்தி டி.வி.நடிகை அமன்சந்த் (26), இவர் பல இந்தி தொடர்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் சினிமா உதவி இயக்குநர் தீபக் மிஸ்ரா என்பவர் இவரை தொடர்பு கொண்டு இந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாகவும், அதனால் நேரில் சந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இருவரும், மும்பை அந்தேரி லோகண்ட்வாலாவில் உள்ள ஒரு காப்பி ஷாப்பில் சந்தித்து பேசியுள்ளனர்.

அந்த சமயத்தில், உதவி இயக்குநர் தீபக் மிஸ்ரா அமன்சந்துவிடம் நாங்கள் இயக்கி வரும் படங்களில் நடிக்க வாய்ப்பு தருகிறோம்.

அதற்கு கைமாறாக உங்கள் படுக்கையை என்னுடனும், இயக்குநருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என கொச்சையாக பேசியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அமன்சந்த் எழுந்து செல்ல முற்பட்ட போது, தீபக் மிஸ்ரா அவரின் கையை பிடித்து முத்தமிட்டுள்ளார்.

இதனால் அமன்சந்த் கோபத்தில் தீபக்மிஸ்ராவின் சட்டையை பிடித்து இழுத்து கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார்.

இதனையடுத்து அமன்சந்த் பொலிசிடம் புகார் தெரிவிக்கவே, வழக்குபதிவு செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி