படுக்கைக்கு அழைத்த இயக்குனரை அடித்து உதைத்த பிக்பாஸ் நடிகை….

- in சினிமா
107
Comments Off on படுக்கைக்கு அழைத்த இயக்குனரை அடித்து உதைத்த பிக்பாஸ் நடிகை….
தன்னை படுக்கைக்கு அழைத்த இயக்குனரை அடித்து உதைத்த அனுபவம் பற்றி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்டுள்ள நடிகை சஞ்சனா ஆன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

சமீப காலமாக தாங்கள் சந்திந்த பாலியல் தொந்தரவுகள் பற்றி நடிகைகள், மாடல்கள் என பல பெண்கள், சமூக வலைத்தளங்களில் ‘மீ டூ’ என்கிற ஹேஸ்டேக் மூலம்  தைரியமாக பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், தெலுங்கு பிக் பாச் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்குபெறவுள்ள நடிகை சஞ்சனா ஆனே தான் தான் சந்தித்த பாலியல் தொல்லை பற்றி கூறியுள்ளார்.
நான் மாடலிங் செய்து கொண்டே சினிமா வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தேன். அப்போது ‘சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என உங்களுக்கு தெரியும்’ என ஒரு இயக்குனர் என்னிடம் சூசகமாக பேசினார். ஆனால், அவர் கூறியது என்ன என்பது அப்போது எனக்கு தெரியவில்லை.

ஆனால், என் நண்பர்கள் மூலம் அவர் கூறியதை புரிந்து கொண்ட நான் அவரை நேரில் சந்தித்து அடி கொடுத்தேன். அதன் பின் மோசமான வார்த்தைகளால் அவரை திட்டிவிட்டு அங்கிருந்து வந்து விட்டேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இவர் தற்போது பிக்பாஸ் வீட்டில் இருப்பதால் இவரின் பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரை அடுத்த ஸ்ரீரெட்டி எனவும் சிலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி