படப்பிடிப்பில் விபத்து தனுஷுக்கு காலில் காயம் !

- in சினிமா
368
Comments Off on படப்பிடிப்பில் விபத்து தனுஷுக்கு காலில் காயம் !
நடிகர் தனுஷ் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தால் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனுஷ் காயம் குறித்த தகவல் அறிந்தவுடன் ரஜினி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் திரைப்படம் ‘மாரி 2’. இந்த படத்தில் நாயகன் தனுஷூம் வில்லன் டோவினோ தாமஸும் மோதும் காட்சியின் படப்பிடிப்பு நேற்று நடந்தது. இந்த சண்டைக்காட்சியின்போது எதிர்பாராதவிதமாக தனுஷூக்கு இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு தனுஷை படக்குழுவினர் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது தனுஷின் உடல் சிகிச்சைக்கு பின் தேறி வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தனுஷ் காயம் குறித்த தகவல் அறிந்து ரஜினி குடும்பத்தினர் தனுஷை நேரில் சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர். ரஜினி தற்போது டேராடூனில் படப்பிடிப்பில் இருப்பதால் அவரால் வரமுடியவில்லை. இருப்பினும் போன் மூலம் தனுஷ் உடல்நிலை குறித்து அவர் விசாரித்ததாக கூறப்படுகிறது.

இன்னும் ஒருசில நாட்களில் தனுஷ் முழுமையாக குணமடைந்துவிடுவார் என்றும் அதன்பின்னர் அவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி