பஞ்சாப் அணி ‘திரில்’ வெற்றி * வீணானது ஸ்ரேயாஸ் போராட்டம்

- in IPL LIVE, கிரிக்கெட்
174
Comments Off on பஞ்சாப் அணி ‘திரில்’ வெற்றி * வீணானது ஸ்ரேயாஸ் போராட்டம்

டெல்லி : டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில்,கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.  இன்று நடந்த ஐபிஎல் 22-வது லீக் போட்டியில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் கம்பீர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், ஆரோன் பிஞ்ச் களமிறங்கினர். பிஞ்ச் 2 ரன் மட்டுமே எடுத்து ஆவேஷ் கான் பந்துவீச்சில் ஷ்ரேயாஸ் வசம் பிடிபட்டார்.

அடுத்து ராகுலுடன் மயாங்க் அகர்வால் இணைந்தார். ராகுல் 23 ரன் (15 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), அகர்வால் 21 ரன் எடுத்து (16 பந்து, 3 பவுண்டரி) லியாம் பிளங்க்கெட் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினர். இதனையடுத்து 20 ஓவரில் 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. 20 ஓவரில் டெல்லி  அணி 8 விக்கெட்களை இழந்து 139 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

Facebook Comments

You may also like

தேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி

இந்திய அணியில் விளையாடும் வீரர்களின் உடற்தகுதியை சரிபார்க்க இந்திய கிரிக்கெட்