நேரலையின் போது பெண் செய்தியாளர் உடலில் குண்டு பாய்ந்து பலி

- in டாப் நியூஸ்
53
Comments Off on நேரலையின் போது பெண் செய்தியாளர் உடலில் குண்டு பாய்ந்து பலி
காபூல்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 57 பேர் உயிரிழந்துள்னர், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
காபூலில் உள்ள வாக்காளர் பதிவு மையத்தின் வெளிப்புறத்தில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது,ஆப்கானிஸ்தானில், வரும் அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்பகுதியை குறிவைத்து, தாக்குதல் நடந்துள்ளது. இந்தத் தாக்குதலை அரங்கேற்றிய தீவிரவாதிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், உயிரிழந்த அப்பாவிப் பொதுமக்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் கூறியுள்ளது.
இதனிடையே, இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த சம்பவத்தின் போது நேரலையில் செய்தி வழங்கிகொண்டிருந்த மரியா என்ற பெண் பத்திரிகையாளர் உடலில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்