நீரிலும், நிலத்திலும் தரையிறங்கும் உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி!

- in டாப் நியூஸ், டோன்ட் மிஸ்
456
Comments Off on நீரிலும், நிலத்திலும் தரையிறங்கும் உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி!

நீரிலும், நிலத்திலும் தரையிறங்கும் உலகின் மிகப்பெரிய விமானத்தை சீனாவில் முதல் முறையாக வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

சீனா முதல் முறையாக நீரிலும், நிலத்திலும் தரையிறங்கும் உலகின் மிகப்பெரிய விமானத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

சீன அரசுக்கு சொந்தமான விமான தயாரிப்பு நிறுவனமான விமான தொழில்துறை கழகம், நீரிலும், நிலத்திலும் தரையிறங்கக் கூடிய இந்த விமானத்தை வடிவமைத்துள்ளது. இந்த விமானத்தை தயாரிக்க எட்டு ஆண்டுகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஏஜி600 ரக விமானத்திற்கு ‘குன்லாங்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இதன் முதல் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. குயாங்டங்க் மாகாணத்தின் ஜூகாயில் உள்ள ஜின்வான் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட குன்லாங் விமானம் சுமார் ஒரு மணி நேரம் வானில் பறந்து வெற்றிகரமாக ஓடுதளத்தில் தரையிறங்கியது.

அந்த விமானத்தின் சோதனை ஓட்டம் சீனாவின் அரசு தொலைகாட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த விமானம் 37 மீட்டர் நீளம் கொண்டது. அதன் சிறகுகள் 38.8 மீட்டர் நீளமானவை.

இதில் மொத்தம் 4 இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுவே, நீரிலும், நிலத்திலும் தரையிறங்கக் கூடிய மிகப்பெரிய விமானமாகும். இந்த விமானம் கடலில் மீட்பு பணியிலும், காட்டுத்தீ அணைப்பதற்கும், கடலோர கண்காணிப்பு பணிக்கும் பயன்படுத்தப்படும்.

சுமார் 50 பேர் பயணம் செய்யக் கூடிய இந்த விமானத்தில் 20 நொடியில் 12 டன் தண்ணீரை பீய்ச்சி அடித்து காட்டுத்தீயை அணைக்க முடியும்.ஒரே நேரத்தில் 370 டன் தண்ணீரை கொண்டு செல்ல முடியும். இந்த விமானத்தை வாங்க ஏற்கனவே 12 நாடுகள் முன்பதிவு செய்துள்ளன.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்