நீதிமன்றங்களே சரியில்லை: சாருஹாசன் அதிரடி பேட்டி

- in டாப் நியூஸ்
54
Comments Off on நீதிமன்றங்களே சரியில்லை: சாருஹாசன் அதிரடி பேட்டி
நான் சுப்ரீம் கோர்ட் வரை சென்று வந்தவன் என்றும் இந்த நீதிமன்றங்களே சரியில்லை என்றும் தனியார் ஊடகம் ஒன்றுக்கு நடிகர் கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் அதிரடி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
தூத்துகுடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து அந்த பேட்டியில் கூறிய சாருஹாசன், ‘தூத்துகுடி போராட்டத்தில் ஒருசிலர் நுழைந்து குழப்பம் விளைவித்ததால் தான் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. தூத்துகுடியில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். இதற்கு எதற்கு விசாரணை கமிஷன்? நான் விசாரணை கமிஷனில் நம்பிக்கை இல்லாதவன். நான் சுப்ரீம் கோர்ட் வரை சென்று வாதாடியவன். இந்த நீதிமன்றங்களே சரியில்லை’ என்று கூறியுள்ளார்.

தூத்துகுடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால் தான் கலவரம் ஏற்பட்டது என்று ரஜினிகாந்த் கூறியிருந்த நிலையில் அவருடைய கருத்தை ஆமோதிப்பது போலவே சாருஹாசனின் பேட்டி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்