நீதிபதிகளுடன் தீபக் மிஸ்ரா அவசர ஆலோசனை

- in டாப் நியூஸ்
72
Comments Off on நீதிபதிகளுடன் தீபக் மிஸ்ரா அவசர ஆலோசனை

புதுடில்லி : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவிநீக்கம் செய்வதற்கான கண்டன தீர்மானத்தை துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான வெங்கைய்யா நாயுடு நிராகரித்தார்.

இதனையடுத்து தீபக் மிஸ்ரா, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டம் வழக்கத்திற்கு மாறாக 20 நிமிடங்கள் வரை நடந்தது. நீதிபதிகளுடன், தலைமை நீதிபதி ஆலோசனை நடத்துவது வழக்கமான ஒன்று என்றாலும், பொதுவாக ஆலோசனை கூட்டம் 5 நிமிடங்களுக்கு மேல் நடந்தது இல்லை. ஆனால் வெங்கைய்ய நாயுடு தீபக் மிஸ்ராவிற்கு எதிரான கண்டன தீர்மானத்தை நிராகரித்துள்ள நிலையில் வழக்கத்திற்கு மாறாக நடந்த நீதிபதிகளின் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த கூட்டத்தில் பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நீதிபதிகளின் இந்த ஆலோசனை கூட்டம் காரணமாக சுப்ரீம் கோர்ட்டின் அனைத்து அமர்வுகளும் 15 நிமிடங்கள் தாமதமாகவே கூடின.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்