நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு

- in டாப் நியூஸ்
64
Comments Off on நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு

ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலையான, ஐ.சி.எப்.,பில், நீண்ட கண்ணாடி ஜன்னலுடன், மூன்றடுக்கு, ‘ஏசி’ பெட்டி தயாரிக்கப்பட்டுள்ளது. ஐ.சி எப்.,பில், ஜெர்மன் தொழில்நுட்பத்தில், ‘லிங் ஹாப்மென் புஷ்’ என்கிற, எல்.எச்.பி., பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இத்துடன், ‘ரயில் – 18’ திட்டத்திற்கான பெட்டிகள் தயாரிப்பில் உள்ளது. வரும், 2020ல், ‘ரயில் – 20’ திட்டத்திற்கு, முழுவதும் அலுமினியத்தால், உலக தரத்தில், சகல வசதிகளுடன், ரயில் பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஐ.சி.எப்.,பில், ஜெர்மன்தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு, ரயில் போக்குவரத்தில் இணைக்கப்பட்டுள்ள, எல்.எச்.பி., மூன்றடுக்கு, ‘ஏசி’ பெட்டிகளில், இருபுறமும், ஸ்டீல் சுவர் பகுதியில், கண்ணாடி ஜன்னல்கள், தனித்தனியாக பொருத்தப்பட்டிருக்கும். இந்த கண்ணாடி ஜன்னல்கள், பெரிதாக இருந்தால், பயணம் செய்யும்போது, முக்கியமான இடங்களில், வெளியில் உள்ள இயற்கை அழகையும், ரசிக்க ஏதுவாக இருக்கும், பெட்டியில், இயற்கை வெளிச்சமும் கூடுதலாக கிடைக்கும் என, பயணியர் தரப்பில், ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. இதையொட்டி, தெற்கு ரயில்வேக்காக, ஐ.சி.எப்.,பில், முதன் முதலாக, ‘ஏசி’ மூன்றடுக்கு பெட்டி, இருபக்கமும், நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

இடையிடையே, ஸ்டீல் சுவர் தடுப்பு இல்லாமல், பெட்டியின் முழு நீளத்திற்கும், நவீன தொழில்நுட்பத்திலான, கண்ணாடி ஜன்னல் பொருத்தப்பட்டு உள்ளதால், பகல் நேரத்தில், விளக்குகள்போடாமலேயே வெளிச்சம் கிடைக்கும்.

பயணத்தின் போது, பயணியர் வெளிப்புற காட்சிகளை பார்க்க, ஜன்னல் ஏதுவாக இருக்கும்.இத்துடன், அழகாக இருக்கை வசதிகள், பெட்டி முழுவதும் எல்.இ.டி., விளக்குகள், நவீன கழிப்பறை பொருத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் பெட்டி, 130 கி.மீ., வேகத்தில் இயங்கக்கூடியது.இப்பெட்டி, 2.2 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
– நமது நிருபர் –

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்