நீட் தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்பே இல்லை, தமிழிசை திட்டவட்டம் !

- in டாப் நியூஸ்
49
Comments Off on நீட் தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்பே இல்லை, தமிழிசை திட்டவட்டம் !
நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தேர்வில் தோல்வியடைந்ததால் விழுப்புரம் மாவட்டம் பெருவளூரைச் சேர்ந்த பிரதீபா என்ற மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கு அனிதா என்ற மாணவி தற்கொலை செய்துக்கொண்ட நிலையில், மீண்டும் ஒரு மாணவியின் தற்கொலை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.
அவர் கூறியதாவது, மருத்துவ சீட் கிடைக்கவில்லை என்றால் வேறு வாய்ப்பு உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுபடியே நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வு குறித்து தமிழக தலைவர்கள் தங்களது கருத்துகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.
நீட் தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்பே இல்லை, அரசியல் தலைவர்கள் மாணவர்களை ஏமாற்ற வேண்டாம். உயிரை காப்பாற்ற மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்கள் தோல்வியால் உயிரை இழக்கக்கூடாது என கூறியுள்ளார்.

 

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்