நீட் இருக்கட்டும் விஷால், முதலில் இதற்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

- in சமூக சீர்கேடு, சினிமா
144
Comments Off on நீட் இருக்கட்டும் விஷால், முதலில் இதற்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

சென்னை: படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தமிழ் திரையுலகில் உள்ளது என்று சில நடிகைகள் கூறியுள்ள நிலையில் இது குறித்து விஷால் நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பதை எதிர்த்து நடிகை ஸ்ரீ ரெட்டி போராடி வருகிறார். தமிழ் திரையுலகில் அப்படி எந்த நடிகையும் இதுவரை போராடவில்லை. இருப்பினும் தமிழ் திரையுலகிலும் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என்று சில நடிகைகள் தெரிவித்துள்ளனர்.

படுக்கை தமிழ் திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என்று சில முன்னணி நடிகைகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு சில படத்தில் நடித்துள்ள நடிகைகளும் கூறியுள்ளனர். சினிமா துறையில் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என்பதை சமந்தா கூட ஒப்புக் கொண்டுள்ளார். கலாபக் காதலன் ஆர்யாவின் கலாபக் காதலன் படத்தில் அக்காவின் கணவரை அடையத் துடித்த மைத்துனியாக நடித்தவர் அக்ஷயா. தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள அவரும் தமிழ் திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார்.

புகார் சில நடிகைகளோ படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது ஆனால் என்னை யாரும் அழைக்கவில்லை என்று சப்பை கட்டு கட்டுகிறார்கள். பகிரங்கமாக தெரிவித்தால் பட வாய்ப்புக்கள் பாதிக்குமோ என்று பல நடிகைகள் அஞ்சுகிறார்கள். அதிகாரம் படைத்தவர்கள் கூட படுக்கைக்கு அழைப்பதால் அதை வெளியே சொல்ல நடிகைகள் பயப்படுகிறார்கள். நடவடிக்கை நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் விஷால் ஊர் விஷயம் பேசுவதை விட்டுவிட்டு படுக்கை பிரச்சனை குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க. RELATED ARTICLES

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி