நிர்மலா தேவி, என் கணவரை 3 முறை சந்தித்து உள்ளார் – உதவி பேராசிரியர் முருகனின் மனைவி சுஜா

- in டாப் நியூஸ்
124
Comments Off on நிர்மலா தேவி, என் கணவரை 3 முறை சந்தித்து உள்ளார் – உதவி பேராசிரியர் முருகனின் மனைவி சுஜா
மதுரை,
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் மேலாண்மைக் கல்வி துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் வி.முருகன். இவர் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய விவகாரத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. மேலும், பல்கலைக்கழக உயரதிகாரிகளுக்கும், வெளிநபர்களுக்கும் இடையே தரகர் போல செயல்பட்டுள்ளதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீஸ் காவலில் இருந்து வருகிறார்.
இதனிடையே மதுரை ஒத்தக்கடையிலுள்ள முருகன்  வீட்டில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். முருகனின் மனைவி சுஜாவிடம், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் முன்னிலையில் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சில ஆவணங்களை போலீஸார் கைப்பற்றியதாக தகவல்
வெளியானது.
இந்த நிலையில் உதவி பேராசிரியர் முருகனின் மனைவி சுஜா கூறியதாவது:-
நிர்மலா தேவி விவகாரத்தில் எனது கணவரை சிக்கவைக்க முயற்சி செய்கின்றனர். முருகனை கைது செய்ததன் மூலம் உயரதிகாரிகளை காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள் என அவர் கூறியுள்ளார். மேலும், புத்தக பயிற்சியில் நிர்மலா தேவி சேர்க்கப்பட்டதில் சந்தேகம் உள்ளது. நிர்மலா தங்கவைக்கப்பட்ட ஏ.சி. அறையில் உயரதிகாரி ஒருவர் அடிக்கடி சந்தித்தார்.
பல்கலைக்கழகம்  தரப்பில் இருந்து சமாதானப்படுத்தும் வகையில் மறைமுக மிரட்டல்கள் வந்தன.  பத்திரிகையாளர்களை சந்திக்க கூடாது எனவும், தலைமறைவாக இருக்கும்படியும் கூறினார்கள் . நிர்மலா தேவி, என் கணவரை 3 முறை சந்தித்து உள்ளார். பல்கலை விழாவின் போது ஆளுநருக்கு அருகில் நிர்மலா தேவியை நிறுத்தியது யார் என தெரியவில்லை? என கூறி உள்ளார்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்