நிர்மலாதேவி வீட்டிற்கு, ‘சீல்’; தஞ்சை பேராசிரியையிடம் விசாரணை

- in சமூக சீர்கேடு, டாப் நியூஸ்
139
Comments Off on நிர்மலாதேவி வீட்டிற்கு, ‘சீல்’; தஞ்சை பேராசிரியையிடம் விசாரணை

அருப்புக்கோட்டை, தேவாங்கர் கலை கல்லுாரி உதவி பேராசிரியை, நிர்மலாதேவி, மாணவியர் சிலரை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கில், கைது செய்யப்பட்டு, சி.பி.சி.ஐ.டி., போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர்.நேற்று முன்தினம் மதியம், 3:30 மணிக்கு, அருப்புக்கோட்டை ஆத்தி பட்டி காவ்யன் நகரில் உள்ள நிர்மலா தேவியின் வீட்டிற்கு, சி.பி.சி.ஐ.டி., போலீசார், சென்றனர்.

அவர்களுடன் சென்ற நிர்மலாதேவியின் சகோதரர் ரவி முன்னிலையில், போலீசார், ஆறு மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர். பின், கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க், முக்கிய ஆவணங்கள், சொத்து விபரங்கள், வங்கி பாஸ் புத்தகங்களை கைப்பற்றினர். இரு பைகள் நிறைய ஆவணங்கள், கம்ப்யூட்டர், சி.பி.யு., ஆகியவற்றை எடுத்துச் சென்றனர். பின், வீட்டிற்கு, ‘சீல்’ வைத்தனர்.நிர்மலா தேவியின் அலைபேசி தொடர்புகளை ஆராய்ந்து, சம்மன் அனுப்பப்பட்டவர்களில், சில ஒப்பந்ததாரர்கள் மற்றும் பேராசிரியையிடம் நேற்று விசாரணை நடந்தது.

நிர்மலா தேவியின் கணவர் அரசு ஒப்பந்ததாரர் என்பதால், மூன்று கட்டட ஒப்பந்ததாரர் களிடம், விருது நகர், சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில், போலீசார் விசாரணை செய்தனர்.மதுரையில், நிர்மலாதேவி உடன் புத்தாக்க பயிற்சியில் பங்கேற்ற,தஞ்சாவூரை சேர்ந்த பேராசிரியை ராஜம் என்பவரிடமும் நேற்று, மூன்று மணி நேரம் விசாரணை நடந்தது.

நிர்மலா தேவியுடன், எம்.பில்., பயின்ற கருப்பசாமி, தற்போது காமராஜ் பல்கலை, ஆராய்ச்சி மாணவராக உள்ளார். நிர்மலா தேவியின் கைதுக்கு பின்னர், கருப்பசாமி தலைமறைவானார். சி.பி.சி.ஐ.டி., போலீசார், நான்கு குழுக்களாக பிரிந்து, கருப்பசாமியின் ஊரான விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே, நாடாகுளம் மற்றும் அவரது உறவினர்கள் இருக்கும் கிராமங்களில் விசாரித்து வருகின்றனர்.

பல்கலைக்குள் எதிர்ப்பு கோஷ்டிகள்

மதுரை காமராஜர் பல்கலையில், ‘மாஜி’ துணை வேந்தர் கல்யாணி கால கட்டத்தில், அவருக்கு ஆதரவு, எதிர்ப்பு கோஷ்டிகள் உருவாகி, போராட்டம், ஆர்ப்பாட்டம், நீதிமன்ற வழக்கு என, பல்வேறு முட்டுக்கட்டைகளால் பல்கலை வளர்ச்சி பாதித்தது. அதற்கு அடுத்து, இரு ஆண்டுகளாக, துணைவேந்தர் பணியிடம் காலியாக இருந்ததும், பல்கலைக்கு பின்னடைவாக இருந்தது. துணைவேந்தராக செல்லத்துரை பொறுப்பேற்ற பின், எதிர்ப்பு கோஷ்டியினரை பல வழிகளில் சமாதானப்படுத்தி, சுமுக நிலையை ஏற்படுத்தினார். தற்போது, நிர்மலா தேவி விவகாரத்தால், பல்கலைக்குள் மீண்டும் எதிர்ப்பு கோஷ்டிகள் உருவாகியுள்ளன. அதை சமாளிக்க, அவருக்கு ஆதரவாக, பல்கலை பேராசிரியர் நலச் சங்கம் உட்பட சில சங்கங் கள் களத்தில் இறங்கி உள்ளன.

இதுதவிர, துறைகள் வாரியாக தனி நபர்கள் சிலர், முதல்வர், கவர்னர், உயர்கல்வி செயலர் என, துணைவேந்தருக்கு ஆதரவாக கடிதங்கள் அனுப்பும் போராட்டம் துவக்கி உள்ளனர். பல்கலையில் இன்று, துணை வேந்தருக்கு ஆதரவாக போராட்டமும் நடக்கவுள்ளது.

இது குறித்து, ஆராய்ச்சி பிரிவு கண்காணிப் பாளர் பால்பாண்டி கூறியதாவது:பேராசிரியை ஆடியோ பேச்சு குறித்து,விசாரணை நடக்கிறது. சம்பந்தப்பட்ட கல்லுாரி நிர்வாகத் திற்கு இடையே ஏற்பட்ட மோதல் பின்னணி யில், இந்த ஆடியோ விவகாரம் இருக்கலாம் என்கின்றனர்.இந்நிலையில், உண்மை நில வரம் தெரியாமல், பல்கலை பெயர் பாதிக்கும் வகையிலும், துணைவேந்தருக்கு நெருக்கடி தரும் வகையிலும், சிலர் உள்நோக்கத்துடன் செயல்படுகின்றனர். அவர்களை கண்டித்து, போராட்டம் நடத்தவுள்ளோம். என கூறினார்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்