நிர்மலாதேவி விவகாரம் – 3வது முறையாக ஜாமின் மனு தள்ளுபடி

- in டாப் நியூஸ்
101
Comments Off on நிர்மலாதேவி விவகாரம் – 3வது முறையாக ஜாமின் மனு தள்ளுபடி
மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனுவை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதில் ஆளுநருக்கு தொடர்பு உள்ளது என்று பலரும் தெரிவித்து வந்தனர். ஆளுநர் இதுகுறித்து விசாரணை நடத்த தனி குழு ஒன்றை அமைத்தார்.
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து நிர்மலா தேவியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நிர்மலா தேவி, விருதுநகர் நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் நிர்மலாதேவியின் ஜாமினை அதிரடியாக தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து நிர்மலாதேவி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், நிர்மலா தேவிக்கு ஜாமின் வழங்க மறுத்துவிட்டது.
இந்நிலையில் நிர்மலாதேவி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் 3-வது முறையாக ஜாமின் கேட்டு  மனுத்தாக்கல் செய்தார். இன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கின் மீதான விசாரணையை வரும் 1ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

 

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்