நினைவு இல்லமாகும் ஜெ.,யின் வேதா இல்லம் : போயஸ் கார்டனில் அதிகாரிகள் ஆய்வு

- in டாப் நியூஸ்
74
Comments Off on நினைவு இல்லமாகும் ஜெ.,யின் வேதா இல்லம் : போயஸ் கார்டனில் அதிகாரிகள் ஆய்வு

சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லம், நினைவு இல்லமாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. நினைவு இல்லம் ஆக்குவதற்கான பணிகளை தொடங்குவதற்காக சென்னை கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் இன்று (டிச.,30) காலை முதல் ஆய்வு செய்து வருகின்றனர்.

அதிகாரிகள் ஆய்வு :கலெக்டர், வட்டாட்சியர், வருவாய் துறை அதிகாரிகள், பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஆகியோர் போயஸ் கார்டன் இல்லத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறை அதிகாரிகளும் ஆய்வில் பங்கேற்றுள்ளனர். நினைவு இல்லம் ஆக்குவதற்காக வேதா இல்லத்தில் அளவிடும் பணிகள் நடந்து வருகிறது. இல்லத்தை மதிப்பீடு செய்யும் பணிகளும் நடந்து வருகிறது.

வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்குவதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. வேதா இல்லத்தில் உள்ள சசிகலாவின் 2 அறைகளுக்கு வருமான வரித்துறையினர் ஏற்கனவே சீல் வைத்துள்ளதால், வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னிலையில் இந்த ஆய்வு பணி நடந்து வருகிறது.

போலீசார் குவிப்பு :அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதால் போயஸ் கார்டன் இல்லத்தை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சுமார் 1000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்