நாளை என் மீதும் பாலியல் குற்றச்சாட்டு வரலாம் – விஷால்

- in சினிமா
98
Comments Off on நாளை என் மீதும் பாலியல் குற்றச்சாட்டு வரலாம் – விஷால்
ஸ்ரீரெட்டி வார்த்தை விளையாட்டை நிறுத்திக்கொள்ள வேண்டும் என நடிகர் விஷால் கருத்து தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் பாலியல் சீண்டல்கள் அதிகம் இருப்பதாகக் கூறி போராட்டம் நடத்தினார் ஸ்ரீரெட்டி. திடீரென ஒருநாள் அவருடைய போராட்டம் அரை நிர்வாணப் போராட்டமாக மாற, விஷயம் விஸ்வரூபம் எடுத்தது.
தெலுங்கு சினிமாவில் உள்ள பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள், நடிகைகளுடன் படுக்கையை பகிர்ந்து கொள்கிறார்கள் என அவர் பகீரங்கமாக குற்றம் சாட்டி வருகிறார். சமீபத்தில் கூட நடிகர் நானி தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டதாக அவர் பரபரப்பு புகார் கூறினார். எனவே, ஸ்ரீரெட்டி மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையேல் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என நானி எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று ஆந்திரா சென்ற விஷாலிடம் இதுபற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த விஷால் “நானி எனது சிறந்த நண்பர். பெண்களிடம் எப்படி ஒழுக்கமாக நடந்து கொள்வார் என அனைவருக்கும் தெரியும்.  எந்த ஆதாரமும் இல்லாமல் இப்படி அவர் மீது ஸ்ரீரெட்டி புகார் கூறுவது சரியல்ல. நாளை என் மீது கூட அவர் கூறுவார். அவரால் மற்றவர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது. அவரிடம் ஆதாரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டு இப்படி ஒருவர் பின் ஒருவராக புகார் கூறி பரபரப்பை கிளப்பும் வார்த்தை விளையாட்டை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என கோபமாக கூறினார்.

 

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி