நான் நலமாக உள்ளேன் யாரும் கவலை பட வேண்டாம் – தனுஷ் ட்வீட்

- in சினிமா
171
Comments Off on நான் நலமாக உள்ளேன் யாரும் கவலை பட வேண்டாம் – தனுஷ் ட்வீட்
நடிகர் தனுஷ் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தால் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியானது. 

இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் திரைப்படம் மாரி 2. இந்த படத்தில் நாயகன் தனுஷூம் வில்லன் டோவினோ தாமஸும் மோதும் காட்சியின் படப்பிடிப்பு நேற்று நடந்தது.
இந்த சண்டை காட்சியின்போது எதிர்பாராத விதமாக தனுஷூக்கு இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு தனுஷை படக்குழுவினர் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது தனுஷின் உடல் சிகிச்சைக்கு பின் தேறி வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இன்னும் ஒருசில நாட்களில் தனுஷ் முழுமையாக குணமடைந்துவிடுவார் என்றும் அதன்பின்னர் அவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார். அதில், எனது நம்பிக்கைக்குரிய ரசிகா்களே, மிகப்பெரிய அளவில் விபத்து ஏற்படவில்லை. நான் நலமுடன் இருக்கிறேன். உங்கள் பிராத்தனைக்கு நன்றி. உங்களை நான் பெரிதும் நேசிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

 

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி