நல்லது செய்ய நினைத்து வழக்கில் சிக்கிய கோஹ்லி மற்றும் அவரின் மனைவி

- in டாப் நியூஸ்
407
Comments Off on நல்லது செய்ய நினைத்து வழக்கில் சிக்கிய கோஹ்லி மற்றும் அவரின் மனைவி
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஓடும் காரில் இருந்து குப்பையை கொட்டியதாக ஒருநபரை நடிகை அனுஷ்கா சர்மா வறுத்தெடுத்தார் என்பதும், இதுகுறித்த வீடியோவை தனது டுவிட்டரில் வெளியிட்ட விராத் கோஹ்லி, ‘இவர் போன்ற மனிதரால் எப்படி இந்தியா தூய்மை இந்தியாவாக இருக்க முடியும் என்றும் பதிவு செய்திருந்தார். இந்த வீடியோவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது
இந்த நிலையில் தன்னைப் பார்த்து பொது இடத்தில் திட்டியதற்காக அனுஷ்காவும் இதுகுறித்து வீடியோவை வெளியிட்டதற்காக விராத் கோலியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அர்ஹான்சிங் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதனையடுத்து அனுஷ்கா, விராத் கோஹ்லி ஆகிய இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் அனுஷ்காவிடன் திட்டு வாங்கிய அந்த நபர் அர்ஹான் சிங் என்பதும் இவர் ஒரு குழந்தை நட்சத்திரமாக இருந்தவர் என்பதும் ஷாருக்கான் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் பல ஆண்டுகளுக்கு முன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்