நயன்தாரா மீது பயங்கர கடுப்பில் இயக்குனர்கள், செம ரிவீட்!

- in Featured, சினிமா
173
Comments Off on நயன்தாரா மீது பயங்கர கடுப்பில் இயக்குனர்கள், செம ரிவீட்!

நயந்தாரா என்றாலே இன்றைக்கு சினிமா மீது பலரும் நன்மதிப்பு வைத்திருக்கிறார்கள். அவருடைய மார்க்கெட் அந்தளவிற்கு உள்ளது.

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையான இவர் டாப் ஹீரோக்களோடு நடித்துவிட்டு இப்போது இளவட்ட நாயகர்களோடு நடித்து வருகிறார்.

ஆனால் எல்லோருக்கும் இவரின் மீது இருக்கும் அதிருப்தி என்ற ஒன்று உண்டு என்றால் அது ப்ரோமோஷன் விஷயத்தில் தான்.

ஏற்கனவே தெலுங்கில் படங்களில் நடிக்கும் போது ப்ரோமோஷன் கொள்கையில் உறுதியாக இருந்த நயன்தாராவுக்கு கடைசியில் பாபு பங்காரம் படத்தில் பெரிய சண்டையே வந்துவிட்டது.

இதனால் சில காலம் அவருக்கும் அங்குள்ள இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து தடைபோட்டிருந்தனர். தற்போது நயனுடைய மார்க்கெட்டை கண்டு மீண்டும் மூன்று தெலுங்கு படங்களுக்கு வாய்ப்பு வந்துள்ளதாம்.

ஆனால் பழைய விஷயங்களை மனதில் கொண்டு அவர் பிடிவாதமாக மறுத்துவிட்டாராம். கேட்கும் தொகையை தருகிறேன் என்று சொன்னாலும் சம்மதிக்காத நயன் இப்போது சிவகார்த்திகேயன், அதர்வா போன்ற இளம் நடிகர்களுடன் நடிப்பதை கண்டு தெலுங்கு சினிமாக்காரர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.

நாங்கள் கொடுக்கும் அதிகமான சம்பளத்தை வாங்கிக்கொண்டு தெலுங்கு சூப்பர் ஸ்டார்களோடு நடிக்காமல் இவர்களோடு நடிக்கிறாரே என பொறாமை படுகிறார்களாம்.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி