நடிகையிடம் படுக்கையறை பற்றி பேசிய உதவி இயக்குனர்

- in Featured, சினிமா
83
Comments Off on நடிகையிடம் படுக்கையறை பற்றி பேசிய உதவி இயக்குனர்

மும்பையைச் சேர்ந்த பிரபல இந்தி டி.வி.நடிகை அமன்சந்த், இவர் பல இந்தி தொடர்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சினிமா உதவி இயக்குநர் தீபக் மிஸ்ரா என்பவர் இவரை தொடர்பு கொண்டு இந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாகவும், அதனால் நேரில் சந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு இருவரும், மும்பை அந்தேரி லோகண்ட்வாலாவில் உள்ள ஒரு காப்பி ஷாப்பில் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது உனக்கு சினிமாவில் பெரிய வாய்ப்புக்கள் வாங்கி தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதற்கு கைமாறாக என்னுடன் நீங்கள் உங்கள் படுக்கையறை பகிர வேண்டும் என்று வாய்க்கு வந்த படி பேசியுள்ளார்.

இதில் கடுப்பான அமன்சந்த் சற்றென்று அந்த இடத்தை விட்டு கிளம்ப நினைத்த போது இவர் அவர் கையை பிடித்துள்ளார் . உடனே கோபம் வந்து தீபக்மிஸ்ராவின் சட்டையை பிடித்து இழுத்து கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார்.

அதன் பிறகு போலீசாருக்கு தகவல் அனுப்பப்பட்டு அவர் மீது விசாரணை நடந்துவருகிறது.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி